ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

IPL 2023 : ஹர்திக் பாண்ட்யா, கேன் வில்லியம்சன் பேட்டிங் அப்டேட்டை வெளியிட்ட பயிற்சியாளர் நெஹ்ரா

IPL 2023 : ஹர்திக் பாண்ட்யா, கேன் வில்லியம்சன் பேட்டிங் அப்டேட்டை வெளியிட்ட பயிற்சியாளர் நெஹ்ரா

கேன் வில்லியம்சன் - ஹர்திக் பாண்ட்யா

கேன் வில்லியம்சன் - ஹர்திக் பாண்ட்யா

ஒட்டுமொத்த அளவில் எதிரணிக்கு கடும் சவாலைக் கொடுக்கும் அணிகளில் ஒன்றாக நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மினி ஏலம் முடிந்துள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் அடுத்த கட்டத்திற்கு தயாராகி வருகின்றன. அந்த வகையில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிக்கான வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த மினி ஏலத்தில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சனை குஜராத் அணி ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது.   கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வில்லியம்சனை ரூ. 14 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது.

சமீபத்தில் நடந்த மினி ஏலத்தின்போது வில்லியம்சனை எடுப்பதற்கு எந்த அணியும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் விலைக்கு வாங்கியது. அந்த வகையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ரூ. 12 கோடி குறைவான தொகைக்கு வில்லியம்சன் ஏலத்தில் எடுக்கப்பட்டிருக்கிறார்.

சன்ரைசர்ஸ் அணிக்காக அவர் 76 போட்டிகளில் விளையாடி 2,101 ரன்களை எடுத்துள்ளார். 2016-ல் சன்ரைசர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றபோது அணியின் கேப்டனாக வில்லியம்சன் இருந்தார். இந்நிலையில் குஜராத் அணியில் வில்லியம்சன் எந்த இடத்தில் பேட்டிங் செய்வார் என்ற விபரத்தை பயிற்சியாளர் ஆசிஷ் நெஹ்ரா கூறியுள்ளார். இந்த அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் டேவிட் மில்லர்ஆகியோர் களத்தில் இறங்குவார்கள். நம்பர் 3-இல் யார் விளையாடுவார் என்பது ஒவ்வொரு ஆட்டத்தின்போது முடிவு எடுக்கப்பட்டது.

சதம் அடித்த பாபர் ஆசம்… நியூஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் நிதான ஆட்டம்

இந்நிலையில் கேன் வில்லியம்சன் நம்பர் 3-ல் பேட்டிங் செய்வார் என்றும் ஹர்திக் பாண்ட்யா நம்பர் 4-ல் விளையாடுவார் என்றும் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆசிஷ் நெஹ்ரா கூறியுள்ளார்.

பேட்டிங், பவுலிங் என ஒட்டுமொத்த அளவில் பார்க்கும்போது எதிரணிக்கு கடும் சவாலைக்கொடுக்கும் அணிகளில் ஒன்றாக நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் உள்ளது.

மினி ஏலத்தின்போது அணியில் எடுக்கப்பட்ட வீரர்கள்

மோஹித் சர்மா (ரூ. 50 லட்சம்), ஜோஷ்வா லிட்டில் (ரூ. 4.4 கோடி), உர்வில் பட்டேல் (ரூ. 20 லட்சம்), சிவம் மாவி (ரூ. 6 கோடி), KS பாரத் (ரூ. 1.2 கோடி), ஒடியான் ஸ்மித் (ரூ. 50 லட்சம்), கேன் வில்லியம்சன் (ரூ. 2 கோடி)

அணியில் தக்க வைக்கப்பட்டிருந்த வீரர்கள்…

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஷுப்மன் கில், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், சாய் சுதர்சன், விருத்திமான் சாஹா, மேத்யூ வேட், ரஷித் கான், ராகுல் தெவாடியா, விஜய் சங்கர், முகமது ஷமி, அல்சாரி ஜோசப், யாஷ் தயாள், பிரதீப் சங்வான், தர்ஷன் நல்கண்டே, ஜெயந்த் யாத் , ஆர் சாய் கிஷோர், நூர் அகமது.

First published:

Tags: IPL