கடந்த ஐபிஎல் தொடரிலிருந்தே சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ளார், ஆனால் ஒரு போட்டியில் கூட வாய்ப்பளிக்கவில்லை, இதற்கு மும்பை இந்தியன்ஸ் செட்-அப்பில் முக்கிய பங்கு வகிக்கும் சச்சின் டெண்டுல்கர்தான் காரணமா, பையனை சாத்துப்படி நடக்கும் ஐபிஎல் தொடரில் அறிமுகம் செய்து எங்காவது முக்கியமான கட்டத்தில் அடி வாங்கி விட்டால் நெட்டிசன்கள் ட்ரால் செய்தால் அது அவரது மன உறுதியை குலைக்கும் என்று நினைத்திருக்கலாம்.
ரூ30 லட்சத்துக்கு இவரை மும்பை இந்தியன்ஸ் ஏலம் எடுத்தது. ஏன் இன்னும் வாய்ப்பளிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியதற்கு, சச்சின் டெண்டுல்கர், “இது ஒரு வித்தியாசமான கேள்வி. நான் என்ன நினைக்கிறேன், நான் என்ன உணர்கிறேன் என்பது முக்கியமல்ல. சீசன் ஏற்கெனவே முடிந்து விட்டது.” என்று மும்பை இந்தியன்ஸ் அணித்தேர்வு குழுவின் முடிவு என்பது போல் பட்டும் படாமலும் பதிலளித்துள்ளார்.
ஐபிஎல் 2022- 5 முறை சாம்பியன்களுக்கு மிக மோசமாக அமைந்தது. இந்த முறை அட்டவணையில் கடைசி இடம் பிடித்தது. அணித்தேர்வு பற்றி சச்சின் கூறும்போது, “நான் அணித்தேர்வில் தலையிடுவது கிடையாது. அணி நிர்வாகத்திடம் விட்டு விடுவேன். நான் எப்பவும் இப்படித்தான் இயங்குவது, என் விருப்பத்தை யார் மீதும் திணிப்பது கிடையாது, ஒரு புரோசஸில் வரவேண்டும் என்று நினைப்பவன்.
அர்ஜுன் டெண்டுல்கரைப் பொறுத்தவரை நான் கூறுவதெல்லாம் வழி என்பது சவால் நிறைந்தது. கடினமானது என்று கூறியுள்ளேன். நீ கிரிக்கெட்டை நேசித்ததால்தான் அதை தேர்வு செய்து ஆடி வருகிறாய், தொடர்ந்து இதையே செய், முடிவுகள் உன்னைத் தொடரும். என்றுதான் நான் அர்ஜுனிடம் கூறி வருகிறேன், என்றார் சச்சின் டெண்டுல்கர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IPL 2022, Mumbai Indians, Sachin tendulkar