• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • எதற்காக ஆலோசகர் தேவை?- தோனி நியமனம் குறித்து ஜடேஜா ஆச்சரியம்

எதற்காக ஆலோசகர் தேவை?- தோனி நியமனம் குறித்து ஜடேஜா ஆச்சரியம்

ஹாட்ரிக் கோப்பை மன்னன் தோனி.

ஹாட்ரிக் கோப்பை மன்னன் தோனி.

அணித்தேர்வு உள்ளிட்ட விவகாரங்களில் கோலி திணறுகிறார் மேலும் பெரிய தொடர்களில் கோலிக்கு தோனியின் அனுபவம் கைகொடுக்கும் என்றும் பிசிசிஐ கருதியதால் 2 மாத காலம் ஜெய் ஷா பேச்சு வார்த்தை நடத்தி, பெரிய தொகைக்கு தோனி இந்தப்பொறுப்புக்கு ஒப்புக் கொண்டுள்ளார்.

  • Cricketnext
  • Last Updated :
  • Share this:
    எமிரேட்சில் ஐபிஎல் 2021 தொடர் நடக்கவிருக்கிறது, அங்கேயே உலகக்கோப்பை டி20 தொடரும் நடக்கவிருக்கிறது, இதனால் இருமுறை எமிரேட்ஸில் ஆடி அனுபவம் பெற்ற தோனியை இந்திய டி20 உலகக்கோப்பை அணியின் ஆலோசகராக அறிவுரையாளராக பிசிசிஐ நியமித்துள்ளது, ஆனால் எதற்காக ஆலோசகர் தேவை என்று முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

    அணித்தேர்வு உள்ளிட்ட விவகாரங்களில் கோலி திணறுகிறார் மேலும் பெரிய தொடர்களில் கோலிக்கு தோனியின் அனுபவம் கைகொடுக்கும் என்றும் பிசிசிஐ கருதியதால் 2 மாத காலம் ஜெய் ஷா பேச்சு வார்த்தை நடத்தி, பெரிய தொகைக்கு தோனி இந்தப்பொறுப்புக்கு ஒப்புக் கொண்டுள்ளார், இது 2023 உலகக்கோப்பைக்கும் ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்றும் பார்க்கப்படுகிறது.

    மேலும் 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை, 2013 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி ஆகியவற்றை தோனி வென்றவர், கோலி இன்னமும் ஒரு ஐசிசி கோப்பையைக் கூட வெல்லவில்லை, இந்நிலையில் உத்தி வகுப்பதற்கும் அணித்தேர்வுக்கும் கோலி யார் பேச்சைக் கேட்பாரோ அவரை நியமித்ததில் தவறில்லை, அந்த வகையில் தோனியை கோலி எதிர்த்துப் பேச முடியாது. ரவிசாஸ்திரியும் டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு செல்வதால் எதிர்கால முயற்சியாக தோனி இறக்கப்பட்டுள்ளார் என்று பலதரப்பு கோணங்களும் பரிசீலிக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கூறியதாவது: “நான் ஆச்சரியமடைந்தேன். எம்.எஸ்.தோனியின் மிகப்பெரிய விசிறி நான், என்னை விட பெரிய விசிறி தோனிக்கு இருக்க முடியாது. எம்.எஸ். தோனிதான் இன்னொரு கேப்டனை அணியில் உருவாக்கிய ஒரு கேப்டன் என்பதுதான் அபிப்ராயம்.

    Also Read: டிக்கெட்டுகள், ட்ரெயின்கள், ஹோட்டல்கள் புக் செய்தோர் அம்போ- ஜேம்ஸ் ஆண்டர்சன் விரக்தி

    அப்படி அவரே உருவாக்கிய கேப்டன் கோலி இருக்கும் போதும், இந்திய அணியை உலகின் நம்பர் 1 அணியாக்கிய பயிற்சியாளர் இருக்கும் போதும் ஒரே இரவில் ஒரு ஆலோசகர் தேவை எதற்காக என்று கேட்கிறேன், அதுதான் எனக்கு ஆச்சரியமளிக்கிறது” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: