நாங்கள் அடுத்த சீசனில் இன்னும் வலுவாக திரும்பி வருவோம் என்று லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இந்த சீசனில் அறிமுகமான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தை பிடித்து பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் வெளியேற்றுதல் சுற்றில் பெங்களுரூவிடம் தோற்று வெளியேறியது. இதையடுத்து லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் கூறியதாவது:
லக்னோ அணிக்கு இந்த தொடர் சிறப்பாக அமைந்தது. ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாங்கள் அடுத்த சீசனில் இன்னும் வலுவாக திரும்பி வருவோம் என்று தெரிவித்தார்.
தலைமை பயிற்சியாளர் ஆண்டி பிளவர் மற்றும் கேப்டன் கேஎல் ராகுல் ஆகியோருடன் லக்னோ அணியின் தூண்களில் கம்பீர் ஒருவராக இருந்து வருகிறார். LSG அவர்களின் முதல் சீசனின் ஆரம்பத்திலேயே ஈர்க்கப்பட்டது, லீக் நிலைகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்றது. இருப்பினும், புதனன்று, RCB க்கு எதிராக LSG சிறப்பாக செயல்படவில்லை, ரஜத் படிதாருக்கு 3 கேட்ச்களை விட்டதால் அவர் சதமெடுத்தார். மேலும் தினேஷ் கார்த்திக்கிற்கு ஒரு எல்.பி.மறுக்கப்பட்டது, 2 ரன்களில் அவருக்கு கேட்சை விட்டனர், இதனால் கார்த்திக், படிதார் இணைந்து 92 ரன்களை 6 ஓவர்களில் சேர்த்தனர்.
ஆர்சிபி ஸ்கோர் 207 ரன்களாக லக்னோ இலக்கை விரட்டிய போது ராகுலின் மிடில் ஓவர் மந்தத்தினால் கடைசியில் எவ்வளவு ஈடு கட்டியும் 14 ரன்களில் லக்னோ தோற்று வெளியேறியது.
"இன்று அதிர்ஷ்டம் எங்கள் பக்கம் இல்லை. ஆனால் எங்கள் புதிய அணிக்கு ஒரு சிறந்த தொடர் இந்த ஐபிஎல் தொடர். நாங்கள் வலுவாக திரும்பி வருவோம். மீண்டும் சந்திக்கும் வரை!- கம்பீர் என்று இன்ஸ்டாகிராம் பதிவில் எழுதியுள்ளார்.
கே.எல்.ராகுல் மிடில் ஓவர்களில் இன்னும் அடித்து ஆட வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன, மோசின் கான் என்ற அருமையான பவுலர் கிடைத்துள்ளார், ஆயுஷ் பதோனியையே கடைசி போட்டியிலும் வைத்துக் கொண்டிருக்கலாம், அதை விடுத்து திடீரென பழைய ஐபிஎல் வீரர் மனன் வோராவைக் கொண்டு வந்து அனாவசியமான மாற்றத்தை ஏற்படுத்தினர்.
கே.எல்.ராகுல் சஞ்சு சாம்சன் போல் அடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர், அடுத்த ஐபிஎல் தொடரில் வேறு ஒரு ராகுலைப் பார்க்கலாம், 500 600 ரன்கள் எடுக்கும் தனிமனித சாதனையாளராக இல்லாமல் விரைவு கதியில் ரன் எடுப்பவராக மாறினால் அணியின் வெற்றிக்கு மேன்மேலும் பங்களிப்பவராக இருப்பார். கே.எல்.ராகுல் மாதிரி வீரர்களை கண்டு டி20யில் எதிரணி அஞ்சுவதை விட ஆந்த்ரே ரசல், சஞ்சு சாம்சன், டிம் டேவிட், தினேஷ் கார்த்திக், டேவிட் மில்லர், திவேத்தியா ரக வீரர்களைக் கண்டே எதிரணியினர் அஞ்சுவார்கள், இதை ராகுல் உணர்ந்தால் கம்பீர் விரும்பும் ஒரு வீரராக அவர் மாறிவிடுவார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.