Home /News /sports /

வேண்டும் ஆன்லைன் தேர்வு - வைரலாகும் சிஎஸ்கே ரசிகர் கோரிக்கை

வேண்டும் ஆன்லைன் தேர்வு - வைரலாகும் சிஎஸ்கே ரசிகர் கோரிக்கை

ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே ரசிகர் ஒருவர் ஆன்லைன் தேர்வு வேண்டும் என்ற கோரிக்கையுடன் பதாகையை ஏந்தி நிற்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே ரசிகர் ஒருவர் ஆன்லைன் தேர்வு வேண்டும் என்ற கோரிக்கையுடன் பதாகையை ஏந்தி நிற்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே ரசிகர் ஒருவர் ஆன்லைன் தேர்வு வேண்டும் என்ற கோரிக்கையுடன் பதாகையை ஏந்தி நிற்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    ஐபிஎல் போட்டிகளில் சிக்ஸ்சர், விகெட்டுக்கள் போன்ற ஆட்டத்தின் சுவாரஸ்சிய நிகழ்வுகளை தாண்டி, ரசிகர்கள் மைதானத்தில் செய்யும் சம்பவங்களும் ஹெட்லைன் செய்திகளாக மாறுவது உண்டு.

    அப்படித்தான் மும்பை டிவை பாட்டில் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற சிஎஸ்கே மும்பை இந்தியனஸ் இடையேயான போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த நிலையில், அந்த போட்டியில் ரசிகர் ஒருவரின் பதாகையும் காண்போரின் கவனத்தை ஈர்த்தது.

    போட்டியை மைதானத்தில் காணவந்த சிஎஸ்கே உடை அணிந்திருந்த ரசிகர் ஒருவர், தனது கையில் "#We want Online exam" அதாவது எங்களுக்கு ஆன்லைன் தேர்வுதான் வேண்டும் என கோரிக்கையை எழுப்பியுள்ளார். விநோதமான கோரிக்கை கொண்ட இந்த பதாகையை ஏந்தியுள்ள இந்த ரசிகரின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதையும் படிங்க: ஆந்திராவில் கிராம மக்களுக்கு 2 வாரம் லாக்டவுன்... கொரோனாவை விட கொடிய காரணம்

    கோவிட் பெருந்தொற்று காலத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன. பின்னர், தேர்வுகளும் ஆன்லைன் மூலமே நடைபெற்றது. தற்போது கோவிட் பரவல் குறைந்து அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டதால், அனைத்து தேர்வுகளும் வழக்கம் போல நடைபெறத் தொடங்கியுள்ளன.

    இதற்கு அங்காங்கே எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் ஆன்லைன் முறையில் தேர்வு வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வருவது வாடிக்கை ஆகி வருகிறது. சில மாதம் முன்பு ஒரு சில கல்லூரிகளில் மாணவர்கள் ஆன்லைன் தேர்வு கேட்டு போராட்டம் நடத்திய சம்பவம் நடைபெற்றது.

    தற்போது இந்த கோரிக்கையானது ஐபிஎல் போட்டியிலும் நுழைந்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் சில முறை ஆட்டங்களை விட ரசிகர்கள் ஏந்தி நிற்கும் பதாகைகள் சுவாரஸ்சியமாக இருப்பதுண்டு.

    இந்த ஐபிஎல் போட்டித் தொடரிலேயே, ஒரு இளம்பெண் ஆர்சிபி கோப்பை வெல்லும் வரை திருமணம் செய்யப் போவதில்லை எனவும், ஆண் ரசிகர் ஒருவர் ஹார்திக் பாண்டியா 50 ரன்கள் எடுத்தால் நான் எனது வேலையை ராஜினாமா செய்துவிடுவேன் எனவும் விதம் விதமாக பதாகைகள் ஏந்தி கவனத்தை ஈர்த்துள்ளனர். மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியை வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்த்த தல தோனிக்கு அடுத்து, ஆன்லைன் தேர்வு கேட்டுள்ள இந்த ரசிகர் பேமஸ் ஆகியுள்ளார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: CSK, IPL 2022

    அடுத்த செய்தி