IPL 2021| #CSK vs KKR | நாம் ரன்கள் அதிகம் குவித்துள்ளோம், பந்தா இல்லாமல் எளிமையாக ஆடுவோம்: சிஎஸ்கே வீரர்களிடம் கூறிய தோனி

IPL 2021| #CSK vs KKR | நாம் ரன்கள் அதிகம் குவித்துள்ளோம், பந்தா இல்லாமல் எளிமையாக ஆடுவோம்: சிஎஸ்கே வீரர்களிடம் கூறிய தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ்

மும்பையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2021-ன் 15வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி ஹாட்ரி வெற்றியைப் பதிவு செய்தது. மேலும் புள்ளிகள் அட்டவணையில் முதலிடம் பிடித்தது.

  • Share this:
    மும்பையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2021-ன் 15வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி ஹாட்ரி வெற்றியைப் பதிவு செய்தது. மேலும் புள்ளிகள் அட்டவணையில் முதலிடம் பிடித்தது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட் செய்து அற்புதமாக ஆடி 220/3 என்ற ஸ்கோரை எட்ட தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 31/5 என்று சரிந்து கொண்டிருந்த நிலையில் தினேஷ் கார்த்திக் 24 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உடன் 40 ரன்களை விளாச, கமின்ஸ் 34 பந்துகளில் 4 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 66 ரன்களுடன் நாட் அவுட்டாகத் திகழ, ஆந்த்ரே ரஸல் 22 பந்துகளில் 3 பவுண்டரிகள் 6 சிக்சர்களையும் விளாச ஸ்கோர் 202 ரன்களை எட்டியது. பிரசித் கிருஷ்ணா ரன் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் ஆட்டம் 20 ஓவர்கள் முழுதும் நடைபெற்றிருந்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் பாடு திண்டாட்டம்தான் என்பதை தோனி ஒப்புக் கொண்டுள்ளார்.

    ரஸல் 21 பந்துகளில் அரைசதம் கண்டார். ரஸல் ஆட்டமிழந்தவுடன் கமின்ஸ் வந்தார், தினேஷ் கார்த்திக்கும் பெவிலியன் திரும்பினார். கமின்ஸ் 23 பந்துகளில் அரைசதம் கண்டார். பந்து வீச்சில் கமின்ஸ் 4 ஓவர்களில் 58 ரன்கள் கொடுத்ததை பேட்டிங்கில் தன் 66 மூலம் ஈடுகட்டினார்.

    ஆனால் முன்னதாக சிஎஸ்கே 220 ரன்களை குவித்ததாக் வெற்றி சாத்தியமாயிற்று. ருதுராஜ் கெய்க்வாட் தான் ஏன் ஒரு சிறந்த வீரர் என்பதைக் காட்டினார். 6 பவுண்டரி 4 அலட்சிய சிக்சர்கள் மூலம் 42 பந்துகளில் 64 ரன்களை எடுக்க டுபிளெசி 60 பந்துகளில் 9 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 95 ரன்கள் விளாச இருவரும் 12.2 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்காக 115 ரன்களைச் சேர்த்தனர். மொயின் அலி 12 பந்தில் 25 ரன்கள், தோனி 8 பந்தில் 17, ஜடேஜா ஒரு சிக்சருடன் 1 பந்தில் 6 ரன்கள் எடுக்க சிஎஸ்கே 220/3 என்று ரன் குவித்ததால் போட்டியை தோற்காமல் தப்பியது. மேலும் சாம் கரன் ஒரே ஓவரில் 30 ரன்கள் விளாசப்பட தோனிக்கு கிலி பிடித்தது. 19.1 ஓவரில் கொல்கத்தா 200 ரன்களுக்கு சுருண்டதால் தப்பியது சென்னை. ஆட்டம் இன்னும் 5 பந்துகள் ஆடப்பட்டிருந்தால் சென்னை ஆட்டம் வீணாகப் போயிருக்கும், இதைத்தான் தோனி குறிப்பிட்டார்.

    ஆனால் தீபக் சாஹர், லுங்கி இங்கிடி அருமையாக வீசி தங்களிடையே 7 விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொண்டனர். ஆட்ட நாயகனாக டுபிளெசி தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் ஆட்டம் முடிந்து தோனி கூறியதாவது:

    இது போன்ற ஆட்டங்கள் எனக்கு சுலபமாக அமைந்தது. 15-,16வது ஓவர்களிலிருந்து எனக்கு சுலபமாக இருந்தது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் பேட்ஸ்மெனுக்குமான போட்டியாக அமைந்தது.

    எந்த அணி வெற்றி பெற்றதோ அந்த அணி திட்டங்களை சரியாக செயல்படுத்தியது என்று பொருள். 20 ஓவர் முழுக்க ஆடியிருந்தால் ஆட்டம் இன்னும் நெருக்கமாக வந்திருக்கும்.

    எளிமையாக உணர்ந்து எதிரணியினரை மதிப்பது மிக மிக முக்கியம் என்று கருதுகிறேன். ஒவ்வொரு ஐபிஎல் அணியிலும் பிக் ஹிட்டர்கள் உள்ளனர், அதனால்தான் என் அணியினிரிடம் நான் கூறினேன், நாம் நிறைய ரன்கள் குவித்துள்ளோம், ஆனால் எளிமையாக பந்தா இல்லாமல் ஆடுவோம் என்றேன்.

    ரஸலுக்கு எதிராக ஒரே தெரிவு ஜடேஜா மட்டுமே ஏனெனில் பந்து நின்று திரும்பியது. ரஸலை பவுல்டு செய்ய திட்டமெல்லாம் எதுவும் போடவில்லை. பேட்டிங் நன்றாக இருந்தது, ருதுராஜ் தன் கிளாஸ் என்னவென்பதை இந்த ஆட்டத்தில் காட்டி விட்டார். கடந்த ஐபிஎல் தொடரிலும் அவர் தன் கிளாஸை நிரூபித்தார். மன அளவில் அவர் எப்படி திகழ்கிறார் என்பதை நாங்கள் கணித்துக் கொண்டுதான் அவரை பயன்படுத்துகிறோம். பேட்டிங் நன்றாக இருந்தது, ருதுராஜ் தன் கிளாஸ் என்னவென்பதை இந்த ஆட்டத்தில் காட்டி விட்டார். கடந்த ஐபிஎல் தொடரிலும் அவர் தன் கிளாஸை நிரூபித்தார். மன அளவில் அவர் எப்படி திகழ்கிறார் என்பதை நாங்கள் கணித்துக் கொண்டுதான் அவரை பயன்படுத்துகிறோம்.

    அவரிடம் அடிப்படைகள் வலுவாக இருப்பதால் பெரிய இன்னிங்ஸை ஆடிவிடுகிறார். கடந்த ஐபிஎல் தொடரின் கடைசி சில போட்டிகள் ருதுராஜுக்கு உதவியது.

    இவ்வாறு கூறினார் தோனி.
    Published by:Muthukumar
    First published: