Home /News /sports /

விராட் கோலி, தோனி, ரோஹித் சர்மா- யார் சிறந்த கேப்டன்? - வாட்சனின் தீர்ப்பு

விராட் கோலி, தோனி, ரோஹித் சர்மா- யார் சிறந்த கேப்டன்? - வாட்சனின் தீர்ப்பு

தோனி, கோலி, ரோஹித் சர்மா யார் சிறந்த கேப்டன்?

தோனி, கோலி, ரோஹித் சர்மா யார் சிறந்த கேப்டன்?

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷேன் வாட்சன் இந்தியாவின் இரண்டு பெரிய கேப்டன்களான தோனி, விராட் கோலி இருவரது ஸ்டைல்களையும் அருகிலிருந்து பார்த்தவர் என்ற ஒரு அணுக்கத்தில் யார் சிறந்த கேப்டன் என்று தன் பார்வையில் தீர்ப்பு வழங்கியுள்ளார். இப்போதைய இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவையும் அறுதியிட்டுள்ளார். 

மேலும் படிக்கவும் ...
    ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷேன் வாட்சன் இந்தியாவின் இரண்டு பெரிய கேப்டன்களான தோனி, விராட் கோலி இருவரது ஸ்டைல்களையும் அருகிலிருந்து பார்த்தவர் என்ற ஒரு அணுக்கத்தில் யார் சிறந்த கேப்டன் என்று தன் பார்வையில் தீர்ப்பு வழங்கியுள்ளார். இப்போதைய இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவையும் அறுதியிட்டுள்ளார்.

    முன்னாள் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன், எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆகிய இருவரின் கீழும் விளையாடிய மிகச் சில நபர்களில் ஒருவர். 2018 முதல் 2020 வரை சென்னை சூப்பர் கிங்ஸில் தோனியுடன் நிறைய நேரம் செலவழித்தார் அதே போல் வாட்சன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியுடன் இரண்டு சீசன்களில் (2016 மற்றும் 2017) இருந்தார்.

    இந்நிலையில் ஐசிசி ரிவியூவுக்காக ஷேன் வாட்சன் கூறும்போது, “விராட் ஒரு தலைவராக, நம்பமுடியாத விஷயங்களைச் செய்துள்ளார், வீரர்களை உற்சாகப்படுத்துவதில் வல்லவர், அவர் தன்னைப் பற்றி அதிக எதிர்பார்ப்புகளைப் பெற்றுள்ளார், மேலும் அவர் விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் அதைக் கொண்டு வருகிறார். என்னைப் பொறுத்தவரை, விராட் கோலி ஒரு அதிமனிதர் என்று நான் நம்புகிறேன், அவரைச் சுற்றி வீரர்களை எப்படிக் கொண்டு வந்து திறமையை எப்படி பயன்படுத்துவது என்பது அவருக்குத் தெரியும். களத்துக்கு வெளியே விராட் ஒரு நம்பமுடியாத நல்ல சமநிலையான நபர் அவரிடம் உள்ள அறிவு கவர்ச்சிகரமானது. ஆர்சிபியில் விராட்டுடன் பணியாற்றியது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது.

    தோனிக்கு அவரது நரம்புகள் வழியாக பனி ஓடுகிறது எனவே கூல்தான். அணியின் சூழலில் இருந்து அழுத்தத்தை அகற்றும் அவரது திறன், அவர் தனது வீரர்களை நம்புகிறார், ஒவ்வொருவருக்கும் அவர்களின் திறன்களில் நம்பிக்கை இருப்பதை உறுதி செய்கிறார். தனக்கும் தன்னைச் சுற்றியுள்ள மக்களுக்கும் என்ன வேலை செய்வது என்பது அவருக்குத் தெரியும். அவர் களத்தில் தனது உள்ளுணர்வை நம்புகிறார், வீரர்கள் தங்கள் ஆராய்ச்சியைச் செய்வார்கள் மற்றும் களத்தில் தேவையானதைச் செய்வார்கள் என்று அவர் நம்புகிறார்.

    ரோஹித் சர்மா ஒரு இயல்பான மற்றும் எளிதான தலைவர். அவர் மும்பை இந்தியன்ஸை நெருக்கமாக வழிநடத்துவதை நான் கவனித்தேன், எதுவும் அவரைப் பயமுறுத்தவில்லை. அவர் தனது வேலையை நம்பமுடியாத அளவிற்கு சிறப்பாகச் செய்கிறார், அவருக்கு அனுபவம் உண்டு, அதிக அழுத்த சூழ்நிலைகளில் மும்பை போன்ற ஒரு அணிக்கு அவர் சிறப்பான கேப்டனாக செயல்பட்டார். ஐபிஎல் தொடரில் மும்பை அணி மீது எப்போதும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.” இவ்வாறு மூன்று கேப்டன்கள் பற்றியும் கூறினார் ஷேன் வாட்சன்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Captain Virat Kohli, Cricket, IPL 2022, Mahendra singh dhoni, Rohit sharma

    அடுத்த செய்தி