மும்பை இந்தியன்ஸ் மற்றும்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்திற்கு முன், மேற்கிந்திய நட்சத்திரம் டுவைன் பிராவோ, சகநாட்டவரான கெய்ரன் பொல்லார்டை அவரது கால்களைத் தொட்டு வணங்கினார்.
அன்று சச்சின் டெண்டுல்கர் காலில் விழுந்தார் ஜாண்ட்டி ரோட்ஸ், நேற்று ஜடேஜா தோனி வெற்றி பெற்றவுடன் அப்படியே காலில் விழாத குறையாக தலை வணங்கினார். இந்தியாவுக்கு வந்த பிறகுதான் இவர்கள் இதைக் கடைப்பிடிக்க வேண்டும், ஏனெனில் அவர்கள் நாட்டில் இதெல்லாம் இருந்திருக்க வாய்ப்பில்லை.
எது எப்படியிருந்தாலும் ஒரு மனிதன் இன்னொரு மனிதன் காலில் விழுவது என்பதை சிலர் ஏற்று கொள்ள மாட்டார்கள். இங்கு பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்யும் பழக்கம் உண்டு, வயதில் பெரியவர்கள் என்றாலோ, செயற்கறிய பெரியவர் என்றாலோ காலில் விழுவது இங்கு நடைமுறை. மரியாதை செலுத்துதல் என்பது வேறு தலை வணங்குதல் என்பது வேறு, காரணமில்லாமல் காலில் விழுவது, காலைத் தொட்டுக் கும்பிடுவது என்பது வேறு.
பொலார்ட் காலைத் தொட்டு வணங்கும் பிராவோ - வீடியோ:
அதுவும் அரசியலைப் பீடித்திருந்த இந்த வியாதி தற்போது கிரிக்கெட்டையும் பிடித்து ஆட்டுகிறது என்பதுதான். இருப்பினும், CSK மற்றும் MI இடையே கடும்போட்டி இருந்தபோதிலும், பொலார்டும் பிராவோவும் எப்பொழுதும் ஏதாவது ஒரு வகையில் ஒருவருக்கொருவர் தங்களுக்கான நேரத்தை செலவிடுவார்கள். வியாழன் அன்று, பொலார்டும் பிராவோவும் போட்டிக்கு முன் ஒரு சிறிய உரையாடலைக் கொண்டிருந்தனர், மேலும் சிஎஸ்கே ஆல்ரவுண்டர் மும்பை இந்தியன்ஸ் வீரரின் கால்களைத் தொட்டு வாழ்த்தினார். அதன்பிறகு, பொல்லார்ட் பிராவோவை கட்டிப்பிடித்து இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பொல்லார்ட் புதன்கிழமை மாலை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பொல்லார்டு 2012 இல் மேற்கிந்திய தீவுகள் T20 உலகக் கோப்பை வென்ற அணியில் ஒரு அங்கமாக இருந்தார். அவர் 2021 UAE இல் நடந்த T20 உலகக் கோப்பையில் அணியை வழிநடத்தினார்.
ஒரு புறம் கிரிக்கெட் நவீனமடைந்து வந்தாலும் ஆடுபவர்கள் நவீன வீரர்கள் என்றாலும் இன்னும் இந்த ஜமீந்தார் கால காலில் விழும் பழக்கம் மட்டும் நம்மை விட்டு அகலவில்லை என்பதோடு இங்கு வரும் வெளிநாட்டவர்களையும் பீடித்து விட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.