முகப்பு /செய்தி /விளையாட்டு / இஷான் கிஷனை யார்க்கரில் பவுல்டு செய்த அர்ஜுன் டெண்டுல்கர் - இன்று அறிமுகமாகிறார்?

இஷான் கிஷனை யார்க்கரில் பவுல்டு செய்த அர்ஜுன் டெண்டுல்கர் - இன்று அறிமுகமாகிறார்?

அர்ஜுன் டெண்டுல்கர்

அர்ஜுன் டெண்டுல்கர்

  • Last Updated :

மும்பை இந்தியன்ஸ் வலைப்பயிற்சியில் சச்சின் டெண்டுல்கர் மகனும் இடது கை வேகப்பந்து வீச்சாளருமான அர்ஜுன் டெண்டுல்கர் இஷான் கிஷனை தன் பயங்கர யார்க்கரில் கிளீன் பவுல்டு செய்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்நிலையில் இன்று சிஎஸ்கே அணிக்கு எதிராக அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் போட்டியில் அறிமுகமாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அர்ஜுன் டெண்டுல்கர் இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்கவில்லை. ஜூனியர் டெண்டுல்கர் கடந்த ஆண்டு சையத் முஷ்டாக் அலி டிராபியில் மும்பை அணிக்காக அறிமுகமானார். அர்ஜுன் டெண்டுல்கர் ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் மற்றும் பின்னால் பேட்டிங்கில் பெரிய ஷாட்களை அடிக்கும் திறன்களையும் கொண்டவர்

மும்பை இந்தியன்ஸின் அர்ஜுன் டெண்டுல்கர் இந்தியன் பிரீமியர் லீக்கில் இன்னும் அறிமுகமாகவில்லை, ஆனால் வலைப்பயிற்சியில் அவர் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட இஷான் கிஷனை தன் பாதம் பெயர்க்கும் யார்க்கர் மூலம் பவுல்டு செய்தது மும்பை இந்தியன்ஸ் வெளியிட்ட வீடியோவில் வெளியாகியுள்ளது.

இஷான் கிஷன் பார்முக்கு தடவி வரும் நிலையில் அர்ஜுன் டெண்டுல்கரின் இடி போன்ற யார்க்கரை ஒன்றும் செய்ய முடியவில்லை , பந்து இடிபோல் ஸ்டம்புக்கு அருகில் இறங்கி பெயர்த்தது.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சென்னைக்கு எதிரான போட்டியில் அர்ஜுன் தெண்டுல்கருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.மேலும் அவர் இந்த ஆட்டத்தில் களமிறங்கலாம் எனவும் கூறப்படுகிறது

அர்ஜுன் டெண்டுல்கர் வலைகளில் தனது அபாரத் திறமைகளை வெளிப்படுத்தும் அதே வேளையில், மும்பை இந்தியன்ஸ் இந்தியன் பிரீமியர் லீக்கில் இந்த சீசனில் முதல் 6 ஆட்டங்களில் ஆறில் தோல்வியடைந்து லீக் வரலாற்றில் மோசமான தொடக்கத்தை சமன் செய்துள்ளது.

அர்ஜுன் டெண்டுல்கரை அறிமுகம் செய்வதில் சச்சினின் செல்வாக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை, ஏனெனில் இந்நேரம் அறிமுகமாகியிருக்க வேண்டியவர் அர்ஜுன், இன்னும் அறிமுகமாகவில்லை என்பதால் டி20, அதிலும் ஐபிஎல் தொடரில் தன் மகன் முதலில் விளையாடுவதை சச்சின் விரும்பவில்லை போலும் என்றே பலரும் கூறுகின்றனர், இந்தியாவுக்கு ஆடியபிறகு ஐபிஎல் ஆடலாம் என்று எண்ணம் கொண்டிருக்கலாம் என்று. தெரிகிறது.

top videos

    அல்லது ஐபிஎல் தொடரில் அதிரடியான் இந்தத் தொடரில் இறக்கி விட்டு அவரது பவுலிங்கை பிய்த்து உதறினால் இளம் வீரரின் தன்னம்பிக்கை காலியாகிவிடும் என்றும் அஞ்ச வாய்ப்பிருக்கிறது, உதாரணமாக கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் எதிரணி வெற்றி என்ற நிலையில் அர்ஜுன் டெண்டுல்கர் அந்த ரன்களைக் கொடுத்து விட்டால் ட்ரால்களும் மீம்களும் பறக்கும் இது இளம் வீரரின் மனநிலையை பாதிக்கும் என்றும் கருதியிருக்கலாம். தெரியவில்லை, ஆனால் இன்று அவர் ஆடுகிறார் என்ற ஊகங்கள் அதிகம் வளைய வருகின்றன.

    First published:

    Tags: IPL 2022, Mumbai Indians, Sachin tendulkar