• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டி20 உ.கோப்பையில் வார்னர்தான் தொடக்க வீரராம்-ஆஸ்திரேலியா முடிவு பயனளிக்குமா?

டி20 உ.கோப்பையில் வார்னர்தான் தொடக்க வீரராம்-ஆஸ்திரேலியா முடிவு பயனளிக்குமா?

வார்னர், ஸ்மித்

வார்னர், ஸ்மித்

ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டனான ஆரோன் பிஞ்ச், டி20 உலகக்கோப்பையில் டேவிட் வார்னர்தான் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் என்ற தைரியமான முடிவை எடுத்துள்ளார்.

  • Share this:
    செப்டம்பர் 2020-க்குப் பிறகு வார்னர் டி20 சர்வதேச போட்டிகளில் ஆடவில்லை. வார்னர் இல்லாமல் ஆஸ்திரேலியா 14 டி20 போட்டிகளில் ஆடிவிட்டது. 4 தொடர்களில் வார்னர் இல்லாமல்தான் ஆஸ்திரேலியா ஆடியது. காயம், ஓய்வு போன்றவற்றினால் வார்னர் அணியில் இடம்பெறவில்லை. வார்னர் ஐபிஎல் தொடரிலும் சோபிக்கவில்லை 8 போட்டிகளில் 2 அரைசதங்களை எடுத்தார் ஸ்ட்ரைக் ரேட்டும் இறங்கி 107 ஆகவே உள்ளது.

    ஐபில் முதல் சீசனில் கேப்டனாக நீக்கப்பட்ட வார்னர், 2வது சீசனில் வீரராகவும் அணியிலிருந்து நீக்கப்பட்டார். மே.இ.தீவுகள் தொடருக்கும், வங்கதேசத்தொடருக்கும் வார்னர் செல்லவில்லை. யுஏஇயில் தொடங்கிய ஐபிஎல் தொடரில் வார்னர் 2 போட்டிகளில் 0, 2 என்று சொதப்ப அணியிலிருந்தே நீக்கப்பட்டார், கேட்சை விட்டார்.

    இந்நிலையில் ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் பற்றி கூறுகையில், “டேவிட் வார்னர் கிரிக்கெட் ஆட்டத்தின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர். அவரது தயாரிப்பின் மேல் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. ஹைதராபாத் அணிக்கு ஆட அவர் எப்போதும் விரும்புவார், இப்போது அணியில் இல்லாவிட்டாலும் வெளியில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். என்னுடைய காயத்திலிருந்து மீண்டு வருகிறேன் எனவே டி20 உலகக்கோப்பையில் வார்னரும் நானும் தொடக்க வீரர்களாக இறங்குவதை எதிர்நோக்குகிறேன். ” என்கிறார் பிஞ்ச்.

    கடைசி 5 டி20 தொடர்களை ஆஸ்திரேலியா தோற்றிருக்கிறது. கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் ஹேசில்வுட் ஐபிஎல் தொடரில் யுஏஇ பிட்ச்களுக்குத் தயாராகி விட்டனர், மார்கஸ் ஸ்டாய்னிஸ் காயமடைந்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித் உள்ளேயும் வெளியேயுமாக இருந்து வருகிறார். மற்றபடி ஆஸ்திரேலியாவில் இருக்கும் வீரர்கள் கிரிக்கெட் போட்டிகளில் சமீபமாக ஆடவில்லை, மேத்யூ வேட், மிட்செல் மார்ஷ், மிட்செல் ஸ்டார்க், பாட் கமின்ஸ், ஆடம் ஸாம்பா ஆகியோருக்கு கடினமே.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: