முகப்பு /செய்தி /விளையாட்டு / KKR vs RCB ஆட்டத்தில் முதல் பவுண்டரி அடித்த விராட் கோலியின் ரியாக்ஷன் - ட்விட்டரில் வைரல்

KKR vs RCB ஆட்டத்தில் முதல் பவுண்டரி அடித்த விராட் கோலியின் ரியாக்ஷன் - ட்விட்டரில் வைரல்

விராட் கோலி

விராட் கோலி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, போட்டிகளின்போது தனது ஆக்ரோஷமான செய்கைகளை எந்த தயக்கமுமின்றி தொடர்ந்து வெளிப்படுத்திவருகிறார்.

  • Last Updated :

KKR vs RCB ஆட்டத்தில் முதல் பவுண்டரி அடித்த விராட் கோலியின் ரியாக்ஷன் ட்விட்டரில் வைரலாகி வருகின்றது.

திங்கட்கிழமையன்று, கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் கோலி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். ஆரோன் பிஞ்ச் மற்றும் தேவ்துத் படிக்கல் இணை 67 ரன்கள் என்ற சிறந்த தொடக்கத்தை பெங்களூரு அணி கொண்டிருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் அதிகபட்ச ரன்களை எளிதில் அடைய முடியவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.

படிக்கல் வெளியேறிய பிறகு முதல் இன்னிங்சின் 8வது ஓவரில் கோலி பேட்டிங் செய்யத் தொடங்கினார். தனது பிரதான வடிவத்திற்கு திரும்பிய கேப்டன், ஸ்கோர்போர்டை விரைவான சிங்கிள்ஸ் மற்றும் டபுள்ஸ் மூலம் டிக் செய்து, பிஞ்சை தன் வசம் வைத்திருந்தார். இருப்பினும், இந்த போட்டியில் 25 பந்துகளில் கோலியால் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை என்பதால் அனைவரும் அவரைக் குறிவைத்தனர்.

கடைசியில், 19வது ஓவரில் பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தில் அவரது முதல் பவுண்டரி எடுத்தார். சுவாரஸ்யமாக, அந்த பவுண்டரியையும் அவர் பேட்டின் நுனியில் இருந்து விளாசினார். விளாசிய பிறகு தனது இயல்பான பாணியில் கொண்டாடினார். கமென்டர்கள் உட்பட ஐபிஎல் ரசிகர்கள் வரை கோலியின் விலைமதிப்பற்ற ரியாக்ஷனை கண்டு மகிழ்ந்தனர்.

மேலும் மிஸ்டர் 360 என்றழைக்கப்படும் ஏபி டிவில்லியர்ஸ், பேட்டிங் செய்ய வந்து தனது பேட் மூலம் சிக்ஸர், பவுண்டரிகளை விளாசத் தொடங்கிய பின்னரே, பலரும் கொல்கத்தா அணியின் பந்துவீச்சுக்கு எதிரான ஆட்டத்தை கவனிக்கத் தொடங்கினர். 33 பந்துகளில் டிவில்லியர்ஸ் 73 ரன்களை அடித்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்கள் அடங்கும்.

மேலும் பெங்களூரு அணி 194/2 என்ற வலுவான ஸ்கோருக்கு நகர்ந்தது. இவர்கள் இருவரும் இப்போது வரை ஐபிஎல் பார்ட்னர்ஷிப்பில் 3000 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார்கள்.

POINTS TABLE:

SCHEDULE TIME TABLE:

top videos

    கொல்கத்தா அணியால் 194 என்ற இலக்கை எட்ட முடியவில்லை.  மேலும் பெங்களூரு அணியின் சிறந்த பந்துவீச்சால் ரன்களை அடிக்க முடியவில்லை. வாஷிங்டன் சுந்தர் (2/20) மற்றும் யுஸ்வேந்திர சாஹல் (1/12) ஆகிய விதத்தில் பெங்களூரு அணியின் இரட்டை சுழற்பந்து வீச்சாளர்கள் கொல்கத்தா அணியை மிரட்டினர்.  கொல்கத்தா அணிக்கு மொத்தமாக 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி, 112 ரன்களை மட்டுமே கொடுத்து பெங்களூரு அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

    First published:

    Tags: IPL 2020, RCB, Trending, Twitter, Virat Kohli