• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • சிஎஸ்கேவிற்கு எதிராக கோலி அடித்த 'நோ லுக் சிக்ஸர்' - வைரல் வீடியோ

சிஎஸ்கேவிற்கு எதிராக கோலி அடித்த 'நோ லுக் சிக்ஸர்' - வைரல் வீடியோ

விராட் கோலி

விராட் கோலி

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் விராட் கோலி அடித்த நோ லுக் சிக்ஸர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Share this:
    ஐபிஎல் 2021 தொடரின் 35-வது லீக் போட்டி சார்ஜா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. ஆர்சிபி அணிக்கு எதிரான போடடியில் சிஎஸ்கே 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்காக கேப்டன் விராட் கோலி மற்றும் படிக்கல் களமிறங்கினார்கள். பவர் ப்ளேவில் இந்த ஜோடி அதிரடியாக விளையாடி ரன்ரேட்டை உயர்த்தினார்கள்.

    இந்த போட்டியின் ஐந்தாவது ஓவரின் போது ஷர்துல் தாகூர் வீசிய ஐந்தாவது பந்தை கோலி நோ லுக் சிக்ஸரை விளாசினார். நோ லுக் சிக்ஸர் என்பது தற்போதைய சர்வதேச கிரிக்கெட்டில் நிறைய வீரர்கள் விளையாடி வருகிறார்கள். பந்து பேட்டில் படும்போது அந்த இடத்தை மட்டுமே பார்த்தபடி பந்தினை சிக்ஸருக்கு விரட்டும் பாணி தான் இந்த நோ லுக் சிக்ஸர். இந்த வகையான சிக்ஸர்களை சமீபகாலமாக வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த ஆண்ட்ரே பிளட்சர் அதிகமாக அடித்து வருகிறார்.



    கோலி அடித்த அந்த நோ லுக் சிக்ஸர் மைதானத்தின் மேற்கூரை மீது விழுந்தது. இந்த சிக்ஸர் 82 மீட்டர் வரை சென்றது. சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் 41 பந்துகளை சந்தித்த விராட் கோலி 6 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 53 ரன்கள் எடுத்தார். மேலும் கோலி அடித்த நோ லுக் சிக்ஸர் தான் தற்போது இணையத்தில் வைரலாக உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: