• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஆர்.சி.பி. கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுகிறேன் - மனம் உருகிய விராட் கோலி

ஆர்.சி.பி. கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுகிறேன் - மனம் உருகிய விராட் கோலி

விராட் கோலி

விராட் கோலி

ஐ.பி.எல் 2021 தொடருக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பியிலிருந்து விராட் கோலி விலகுகிறார்.

  • Share this:
    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி, டெஸ்ட் அணி, டி-20 என அனைத்து அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்துவந்தார். அதைத்தவிர ஐ.பி.எல் அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாகவும் விராட் கோலி இருந்துவருகிறார். இருப்பினும், கோலி தலைமையில் பெங்களூரூ அணி இதுவரையில் ஒருமுறை கூட சாம்பியன் பட்டம் வென்றதில்லை.

    இதற்கிடையில், விராத்கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி சரியாக சோபிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்தநிலையில், டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகப் போவதாக விராத் கோலி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலைப்பளு முக்கியம் என்பதை உணர்ந்துள்ளதாலும் கடந்த 8-9 ஆண்டுகளாக மூன்று விதமான கிரிக்கெட்களிலும் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளேன். இதில், 5-6 ஆண்டுகள் அணித் தலைவராக இருந்துள்ளேன்.


    தற்போது, டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கு தலைமை தாங்க தயாராவதற்கு இடம் தேவை என கருதுகிறேன். டி20 அணியின் தலைவராக இருந்தபோது அணிக்காக என்னிடம் இருந்த அனைத்தையும் வழங்கியுள்ளேன். தீவிர ஆலோசனைக்கு பின்னர், டி20 அணித் தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். துபாயில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்த பின்னர் பதவி விலகவுள்ளேன். ஒரு பேட்ஸ்மேனாகத் தொடர்வேன்’ என்று தெரிவித்திருந்தார்.
    ORANGE CAP:

    PURPLE CAP:

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தநிலையில், ஆர்.சி.பி அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியின் ட்விட்டர் பதிவில் வெளியிடப்பட்டுள்ள விராட் கோலி பேசும் வீடியோவில், ‘ஆர்.சி.பி அணியின் கேப்டனாக இதுதான் என்னுடைய கடைசி ஐ.பி.எல். என்னுடைய கடைசி ஐ.பி.எல் போட்டிவரையில் நான் பெங்களூரூ அணியின் வீரனாக தொடர்வேன். எனக்கு ஆதரவு மற்றும் என்னை நம்பிய அனைத்து ஆர்.சி.பி ரசிகர்களுக்கும் என்னுடைய நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: