• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • விராட் கோலியின் ஆடம்பர லம்போகினி கார் விற்பனைக்கு: விலையைப் பார்த்து மிரளாதீங்க

விராட் கோலியின் ஆடம்பர லம்போகினி கார் விற்பனைக்கு: விலையைப் பார்த்து மிரளாதீங்க

கோலியின் லம்போகினி கார்

கோலியின் லம்போகினி கார்

கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் உலகின் விலை உயர்ந்த ஆடம்பர கார்களில் ஒன்றான லம்போகினி கலார்டோ ஸ்பைடர் ரக ஆரஞ்சு நிற கார் கொச்சியில் உள்ள பயன்படுத்தப்பட்ட ஆடம்பர கார் ஷோ ரூமில் விலைக்கு வந்துள்ளது.

  • Share this:
    சச்சின் டெண்டுல்கர் ஒரு கார் பிரியர் பலரக கார்களை வாங்கி ஓட்டி அழகுபார்ப்பவர், கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் ஒரு கார் விரும்பிதான். அவரது ஆரஞ்சு நிற ஆடம்பர லம்போகினி சொகுசு கார் இப்போது கொச்சியில் ரூ.1.35 கோடிக்கு விற்பனைக்கு வந்துள்ளது. ஒரு ஆட்டோமொபைல் வெப்சைட்டில் கண்ட விராட் கோலி இந்த ஆரஞ்சு லம்போகினியை 2015-ல் வாங்கினார். ஆனால் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு இந்தக் காரை விற்று விட்டார். புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்ட இந்த கார் இப்போது கொச்சியில் உள்ள ராயல் ட்ரைவ் என்ற பழைய ஆடம்பர கார் வாங்கி விற்பனை செய்யும் டீலரின் ஷோ ரூமில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ராயல் ட்ரைவ் ஷோ ரூமின் மார்க்கெட்டிங் அதிகாரி கூறும்போது, “இது 2013 லம்போகினி மாடல். இதை விராட் கோலி சிறிது காலமே பயன்படுத்தினார். 10,000 கிமீ வரைதான் ஓடியிருக்கிறது. ஜனவரி 2021-ல் கொல்கத்தாவில் உள்ள ஒரு டீலரிடமிருந்து நாங்கள் இந்த பிரபல காரை வாங்கினோம்” என்றார். இந்த கார் ஸ்டார்ட் ஆகி 4 விநாடிகளில் 100 கிமீ வேகமெடுக்கக் கூடியது. 324 கிமீ வேகம் வரை செல்லக்கூடியது.

    இந்த லம்போகினி வகை கார் அதாவது கல்லார்டோ வகை கடைசியாக 2015-ல் வந்தது , இதற்கு பதில் 2014-லேயே ஹியுராகேன் கார் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் வீரர் விராட் கோலி கார்களின் பிரியர், இவர் டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு கேப்டன்சியிலிருந்து இறங்குகிறார், அதே போல் இப்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2021 முடிந்தவுடன் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டனாகவும் விடைபெறுகிறார். தொடர்ந்து வீரராக ஆடுவேன் என்று கூறியுள்ளார் விராட் கோலி.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: