உன் ஆர்சிபி கான்ட்ராக்டை குளோஸ் பண்ணிடுவேன்: ஜேமிசனிடம் அவுட் ஆன கோலியைக் கேலி செய்யும் மீம்கள்

ஜேமிசனிடம் ஆட்டமிழந்த கோலி.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நேற்று 44 ரன்களில் நன்றாக ஆடிவந்த விராட் கோலி விக்கெட்டை நியூசிலாந்தின் உயரமான ஸ்விங் பவுலர் கைல் ஜேமிசன் எல்.பி. முறையில் வீழ்த்தினார். இது தொடர்பான நெட்டிசன்களின் வைரல் மீம்கள் இதோ.

  • Share this:
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நேற்று 44 ரன்களில் நன்றாக ஆடிவந்த விராட் கோலி விக்கெட்டை நியூசிலாந்தின் உயரமான ஸ்விங் பவுலர் கைல் ஜேமிசன் எல்.பி. முறையில் வீழ்த்தினார்.

    இதனையடுத்து ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டனும் விராட் கோலி என்பதால் கைல் ஜேமிசனும் அந்த அணியைச் சேர்ந்தவர் என்பதால் என் விக்கெட்டையா வீழ்த்துகிறாய் உன் கான்ட்ராக்டை குளோஸ் பண்ணிடுவேன் என்று விராட் கோலி மிரட்டுவது போன்ற மீம்களை ரசிகர்கள் வெளியிட்டு கோலியை கலாய்த்து வருகின்றனர்.

    ஆர்சிபி அணிக்கு ஆடும் கைல் ஜேமிசனும் விராட் கோலியும் ஒரு ஜாலி அரட்டையில் ஐபிஎல் 2021 போட்டியின் போது இங்கிலாந்தின் டியூக்ஸ் பந்தில் எனக்கு வீசுகிறாயா என்று கோலி கேட்க அதற்கு நிச்சயமாக வீச மாட்டேன் என்று கைல் ஜேமிசன் கூறியது வைரலானது. ஜேமிசனின் சமயோசிதத்தை அனைவரும் பாராட்டினார்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் நேற்று விராட் கோலியை பெரிய இன்ஸ்விங்கரில் அவர் முன் காலை நீட்ட வைத்து பேடைத் தாக்கி வீழ்த்தினார் கைல் ஜேமிசன். இது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்க்க இதோ சில மீம்கள்:











    இவ்வாறு ரசிகர்கள் மீம் போட்டு கலாய்த்துள்ளனர்.
    Published by:Muthukumar
    First published: