நாற்காலியை கோபத்துடன் தாக்கிய விராட் கோலியின் முரட்டுத்தனமான செயலை கண்டித்த நடுவர்

விராட் கோலி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி நடத்தை வீதிமிறல் காரணமாக நடுவரால் கண்டிக்கப்பட்டுள்ளார்.

 • Share this:
  கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை உடைத்தெறிந்து வரும் விராட் கோலி சர்ச்சைகளுக்கும் மிகவும் பெயர் போனவர். மைதானத்தில் மிகவும் ஆக்ரேஷமாக செயல்படும் கோலியின் செயல் பலமுறை விமர்சிக்கப்பட்டுள்ளது. பேட்டிங், ஃபீல்டிங், கேப்டன்ஷிப் என அனைத்திலும் கோலி தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்த தவறியதில்லை.

  ஐ.பி.எல் 2021 தொடரின் ஆரம்பத்திலேயே தனது கோபமான செயலால் நடுவரிடம் கண்டிக்கப்பட்டுள்ளார். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கோலி 33 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். கோலி அவுட்டான விரக்தியில் பவுண்டரி லைனில் இருந்த விளம்பர குஷனை உதைத்தும், வீரர்கள் அமரும் நாற்காலியை பேட்டால் அடித்தும் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

  கோலியின் இந்த முரட்டுத்தனமான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த போட்டிக்கு பின் விராட் கோலி நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாக நடுவர் வெங்கலில் நாராயணனால் புகார் தெரிவித்தார். நடுவரின் புகாரை கோலியும் ஒப்புக் கொண்டுள்ளார்.

  விராட் கோலியின் இந்த செயலுக்காக அவர் தண்டனையோ அல்லது அபராதமோ பெறவில்லை. ஏனென்றால் நடத்தை விதிமுறைகளின் படி இது ஆரம்பக்கட்ட தவறு தான். ஆனால் இதேப் போன்ற செயலை விராட் கோலி வரும் போட்டிகளிலும் காண்பித்தால் கடும் விளைவை அவர் சந்திக்க நேரிடலாம்.
  Published by:Vijay R
  First published: