மான்செஸ்டர் போட்டியில் களமிறங்க தயக்கம் தெரிவித்து முதல் நாள் நள்ளிரவில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பிசிசிஐக்கு மெசேஜ் செய்துள்ளதாக இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் கோவர் தெரிவித்துள்ளார். மர்மம் உடையும் நாள் வெகுதொலைவில் இல்லை என்கிறார் டேவிட் கோவர்
தொடரில் 2-1 என்று முன்னிலை வகித்ததையடுத்து இந்திய அணி மிகவும் சாமர்த்தியமாக அடுத்த டெஸ்ட் போட்டியை விளையாடாமல் ரத்து செய்ய வைத்தது என்ற விமர்சனங்களுக்கு இடையிலும் இதே இங்கிலாந்து ஓவல் டெஸ்ட் போட்டியில் வென்றிருந்தால் கொரோனா பயத்தையெல்லாம் உதறி களமிறங்கியிருப்பார்கள் என்றும் விமர்சனங்கள் ஏவப்பட்டு வரும் நிலையிலும் டேவிட் கோவர் முன்னமேயே கோலி மெசேஜ் செய்த விவரத்தை வெளியிட்டுள்ளார்.
டெஸ்ட் கேன்சல் என்ற அதிர்ச்சிகர அறிவிப்புக்குப் பின்னணியில் உள்ள சம்பவங்களை விளக்க வேண்டிய தேவை உள்ளது என்கிறார் டேவிட் கோவர். “வாவ், நான் உட்பட இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த அறிவிப்பு நம்மை இதுவரை இல்லாத முன்னுதாரணமில்லாத பகுதிகளுக்கு கொண்டு செல்கிறது. இதற்கு முன்னர் சில பந்துகள் வீசப்பட்ட நிலையில் கைவிடப்பட்ட நிலையை கண்டிருக்கிறோம் ஆனால் கடைசி மணி நேரத்தில் கேன்சல் அறிவிப்பு முன்னர் இல்லாதது.
குறிப்பாக விராட் கோலி முதல் நாள் நள்ளிரவு பிசிசிஐக்கு போட்டியில் பங்கேற்க இயலாமை குறித்து மெசேஜ் செய்கிறார். இதனால் நிகழ்வுகளின் ஒட்டுமொத்த வரிசையையும் விளக்க வேண்டிய தேவையுள்ளது” என்கிறார் டேவிட் கோவர். மேட்ச் கேன்சல் ஆனவுடனேயே அங்கிருந்து புறப்பட்டு யுஏஇ-க்கு ஐபிஎல் தொடருக்காக வந்தனர் இந்திய அணியினர்.
இதனையடுத்து டேவிட் கோவர் மேலும் கூறும்போது, “வரும் நாட்களில் மான்செஸ்டர் மர்மம் உடையும் வாய்ப்பு உள்ளது. நாங்கள் கேள்விப்படாத ஒரு சில விஷயங்கள் மக்கள் காதுகளை எட்டும். மான்செஸ்டரிலிருந்து இந்திய வீரர்கள் அவ்வளவு சீக்கிரம் வெளியேறியது நமக்கு சில விஷயங்களை புரிய வைக்கிறது, அதாவது மான்செஸ்டர் ரத்துக்கும் ஐபிஎல்-க்கும் தொடர்பு உள்ளதை எடுத்துக் காட்டுகிறது. இந்திய அணிக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் இடையே அந்தரங்க சங்கதிகள் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளன” என்கிறார் டேவிட் கோவர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Captain Virat Kohli, India Vs England, IPL 2021, Test series