ஐபிஎல் 2021 தொடரின் முதல் அரைசதத்தை தனது மகள் வாமிகாவுக்கு தனித்துவமாக அர்பணித்த விராட் கோலி - வீடியோ

விராட் கோலி

ஐபிஎல் 2021 தொடரில் விராட் கோலி அடித்த முதல் அரைசதத்தை அவர் மகள் வாமிகாவிற்கு அர்பணித்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

 • Share this:
  ஐபிஎல் 2021 தொடரின் 16-வது லீக் போட்டியில் ஆர்சிபி - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின். மும்பை வான்கடே மைதானத்தில் நடைறெ்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

  இதையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சோபிக்க தவறினர். மிடில் ஆர்டரில் சிவம் துபே, ராகுல் டிவாட்டியா சற்று சிறப்பாக ஆடியதால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. ஆர்.சி.பி அணி சார்பில் முகமது சிராஜ் மற்றும் ஹர்சல் படேல் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

  இதை தொடர்ந்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் கேப்டன் விராட் கோலி மற்றும் படிக்கல் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.

  ராஜஸ்தான் அணியால் கடைசி வரை இந்த ஜோடியின் அதிரடியை தடுக்கமுடியவில்லை. இறுதியாக ஆர்சிபி அணி 16.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது. படிக்கல் 52 பந்துகளில் 101 ரன்கள் விளாசி ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். விராட் கோலி 72 ரன்கள் எடுத்தார்.

  இதனிடையே நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அரைசதத்தை பதிவு செய்த விராட் கோலி அதனை தனது மகள் வாமிகாவிற்கு அர்ப்பணித்தார். விராட் கோலி அரைசதம் அடித்த பின்னர் தனது மகளின் நினைவாக கைகளை உயர்த்தி காட்டியும், குழந்தையை தாலாட்டுவது போன்று பாவனை செய்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.   
  View this post on Instagram

   

  A post shared by IPL (@iplt20)


  இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 4 வெற்றிகளை பதிவு செய்து ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
  Published by:Vijay R
  First published: