சமூக வலைத்தளங்களில் வைரலாகும் தோனி - விராட் கோலி 'Reunion' புகைப்படங்கள்..

தோனி - விராட் கோலி

ஐ.பி.எல் விளையாட்டின் போது தோனி, விராட் கோலி ஒன்றாக தோள் மீது கை போட்டிருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Share this:
ஐபிஎல் 2021 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சிறப்பாக தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதேபோல சென்னை அணியும் பார்மிற்கு திரும்பியுள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் 25 ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே போட்டிகள் நடைபெற்றது.

முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. 192 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் சேர்த்து 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. 5 போட்டிகளில் 4 வெற்றி ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகளுடன் சிஎஸ்கே உள்ளது. ஆர்சிபி அணி 5 போட்டிகளி்ல 4 வெற்றி ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்துள்ளது.

டாஸின் போது ஆட்டத்தின் இரண்டு அணிகளின் கேப்டன்களான தோனி மற்றும் கோலி ஆகியோர் ஒன்றாக நின்று பேசிக்கொண்டிருந்த மற்றும் தோள் மீது கை போட்டிருந்த காட்சிகள் வைரலானது. ட்விட்டரிலும் இந்த புகைப்படங்கள் “reunion" என்ற தலைப்பில் ஷேர் செய்யப்பட்டது.


இருவருக்கும் இடையேயான அன்பு மற்றும் மரியாதை நிலையானது Virat Kohli + MS Dhoni என குறிப்பிட்டு ஷேர் செய்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த பெயர்கள் விராட் மற்றும் டோனி என ஒரு யூசர் குறிப்பிட்டுள்ளார்.இருவருடைய ரசிகர்களும் சண்டை போட்டு கொள்கிறார்கள், ஆனால் தோனி மற்றும் விராட் எப்போதும் நல்ல நண்பர்களாக உள்ளனர் என மற்றொரு யூசர் கூறியுள்ளார்.

நேற்றைய ஆட்டத்தில் ஜடேஜா சிஎஸ்கே அணி வெற்றி பெற முக்கிய நபராக இருந்துள்ளார். டி20 வரலாற்றிலேயே ஒரே ஓவரில் 36 ரன்கள் சேர்த்த 7-வது பேட்ஸ்மேன் ஜடேஜா என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன் யுவராஜ் சிங், கிறிஸ் கெயில், ரோஸ் வொய்ட்லே, கெய்ரன் பொலார்ட், ஹஸ்ரத்துல்லா ஜஜாய், லியோ கார்ட்டர் ஆகியோர் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Tamilmalar Natarajan
First published: