மும்பை இந்தியன்ஸ் அணியால் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போயிருக்கலாம், ஆனால் அந்த அணி வீரர்கள் உற்சாகமாக இருந்து கொண்டிருக்கிறார்கள், ஏனெனில் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து 6 பேர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் 15 பேர் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்கள். ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ராகுல் சஹர் ஆகிய ஆறு பேரும் அக்டோபர் 17ம் தேதி தொடங்கும் உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்காக விளையாட இருக்கிறார்கள். எனினும் மற்ற 5 வீரர்களை காட்டிலும் இஷான் கிஷனுக்கு ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது.
இடது கை ஆட்டக்காரரான இந்த அதிரடி இளம் புயல், இந்திய அணியின் துடிப்பான அட்டாக் பேட்ஸ்மேன் ஆக விளங்கி வருவதால் தான் வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இஷான் கிஷனை, ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறக்க கேப்டன் விராட் கோலி தீர்மானித்திருப்பதாக தெரிகிறது.
நேற்று (அக் 8) நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான மும்பை இந்தியன்ஸ் அணியின் கடைசி லீக் மோதலில் இஷான் கிஷன் வெறும் 16 பந்துகளில் அரைசதம் கண்டார். அவர் 32 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியின் முடிவில் இஷான் கிஷன் பேசுகையில், கோலி என்னிடம் வந்து ‘நீ தான் உலகக் கோப்பை தொடரில் ஓப்பனிங் பேட்ஸ்மேன், தயாராக இரு’ என தெரிவித்ததாக கூறியிருக்கிறார்.
நீ ஓப்பனிங் செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன். இப்படித்தான் விராட் கோலி என்னிடம் கூறினார். “உன்னைத்தான் ஓப்பனிங் செய்வதற்காக தேர்ந்தெடுத்துள்ளோம். தயாராக இரு. இது போன்ற பெரிய தொடர்களில் ஒவ்வொரு தருணத்திற்கும் நீ தயாராக இருக்க வேண்டும்” இவ்வாறு கோலி கூறியதாக இஷான் தெரிவித்துள்ளார்.
Also Read: 2015 முதல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தொடரும் சோகம்.. இப்படியும் ஒரு சா(வே)தனை..
இந்திய அணியை பொறுத்தவரையில் தற்போது ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் தான் ஓப்பனிங் செய்து வருகின்றனர். கோலி தன்னை 3வது ஆப்ஷனாக வைத்திருக்கிறார். பெங்களூரு அணிக்காக கோலி தான் அனைத்து போட்டிகளிலும் ஓப்பனிங் செய்தார். நடப்பு ஐபிஎல் போட்டிகளில் இஷான் கிஷன் மிடில் ஆர்டரில் இறங்கி ஆடிய போது சோபிக்க முடியாமல் தவித்தார். ஆனால் ஓப்பனிங் செய்ய கடைசி இரண்டு போட்டிகளிலும் அவர் அரை சதம் நொருக்கியிருக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Captain Virat Kohli, IPL, IPL 2021, T20 World Cup