இவர்தான் உலகத்துலயே பெரிய டி20 பிளேயர் - மைக்கேல் வான் கண்டுப்பிடிப்பு!
இவர்தான் உலகத்துலயே பெரிய டி20 பிளேயர் - மைக்கேல் வான் கண்டுப்பிடிப்பு!
மைக்கேல் வான்
மும்பையில் உள்ள பிரபோர்ன் ஸ்டேடியத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2022 போட்டியில் ஜோஸ் பட்லரின் அற்புதமான சதம் - இந்த சீசனின் இரண்டாவது சதமாகும் இதனையடுத்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான் 'உலகின் சிறந்த டி20 வீரர் பட்லர்தன்' என்று உச்சி முகர்ந்துள்ளார்.

பட்லர் தற்போது ஆரஞ்சுத் தொப்புக்குச் சொந்தக்காரர். ஆனால் மைக்கேல் வான் ஐபிஎல் கிரிக்கெட்டின் தரமற்ற கிரிக்கெட்டை வைத்து பட்லர் உலகின் சிறந்த டி20 பிளேயர் என்று கூறியிருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
இங்கிலாந்து விக்கெட் கீப்பர்-பேட்டர் பட்லர் இப்போது ஒரு வருடமாக டி20 கிரிக்கெட்டில் நம்பமுடியாத எண்ணிக்கையைப் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபரில் டி20 உலகக் கோப்பை தொடங்கியதில் இருந்து, பட்லர் 154.43 ஸ்ட்ரைக் ரேட்டைப் பராமரிக்கும் அதே வேளையில், விளையாட்டின் இந்த வடிவத்தில் அவரது சராசரி 80.5 ஆகும்.
இதுவரை 6 போட்டிகளில் 375 ரன்கள் எடுத்திருக்கும் பட்லர், திங்களன்று KKR க்கு எதிராக 61 பந்துகளில் 103 ரன்கள் விளாசினார், ராயல்ஸை 217/5 ஆக உயர்த்தினார்
பேட்டிங்கைத் தொடங்கி, வலது கை ஆட்டக்காரர் ஸ்ட்ரோக்பிளேயின் அதிர்ச்சியூட்டும் காட்சியில் ஐந்து சிக்ஸர்கள் மற்றும் ஒன்பது பவுண்டரிகளை அடித்தார்.
பட்லரின் சில ஷாட்கள் வழக்கத்திற்கு மாறானவை, உமேஷ் யாதவ் பந்து ஒன்றை கருணையற்ற முறையில் அடித்தார் பட்லர். பந்து இந்திய கிரிக்கெட் கிளப்பின் அருகிலுள்ள டென்னிஸ் மைதானத்தில் போய் விழுந்தது, ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கமின்சையும் அவர் விட்டு வைக்கவில்லை. கமின்ஸ் 7 பவுண்டரி 1 சிக்ஸ் விளாசினார், பெரும்பாலும் இது பாட் கமின்ஸ் அடித்ததுதான்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.