தலைக்கனம் ஏறிய ஹர்திக் பாண்டியாவுக்கு உம்ரன் மாலிக் கொடுத்த அடி
தலைக்கனம் ஏறிய ஹர்திக் பாண்டியாவுக்கு உம்ரன் மாலிக் கொடுத்த அடி
உம்ரன் மாலிக் -ஹர்திக் பாண்டியா
உம்ரன் மாலிக்கால் பாண்டியாவும் அவரது ஹெல்மெட்டில் அடிபட்டார், அவர் வழக்கமாக மிக வேகமாக பந்துவீசுவார், சில சமயங்களில் மணிக்கு 150 க்கும் அதிகமாக பந்துவீசுகிறார் உம்ரன் மாலிக்.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது அணியின் முயற்சியால் அதிருப்தி அடைந்தார். சில கட்டங்களில், அவர் போதுமான முன்முயற்சியைக் காட்டாததற்காக தனது ஃபீல்டர்களைக் பாண்டியா கத்துவதைப் பார்த்திருக்கலாம். ஏனெனில் சில பாதி வாய்ப்புகள் கேட்சாக மாறியிருக்கலாம். உம்ரன் மாலிக்கால் பாண்டியாவும் அவரது ஹெல்மெட்டில் அடிபட்டார், அவர் வழக்கமாக மிக வேகமாக பந்துவீசுவார், சில சமயங்களில் மணிக்கு 150 க்கும் அதிகமாக பந்துவீசுகிறார் உம்ரன் மாலிக்.
ஹர்திக் பாண்டியாவை பெரிய தொகைக்கு பெரிய முதலாளி குஜராத் டைட்டன்ஸ் புக் செய்தவுடனேயே அவரது பாடி லாங்குவேஜ் எல்லாம் ஒரு விதமான அராஜகப் போக்கையும் அவரது தலைக்கனம் எகிறியுள்ளதையும் காட்டியது. அன்று டேவிட் மில்லர் ஒரு நாட்டைப் பிரதிநிதித்துவப் படுத்தும் வீரர் என்ற சொரணையின்றி அவரை தாறுமாறாக நடத்தினார், அசிங்கமாக மூஞ்சியை நடுமைதானத்திலேயே காட்டினார். இது போதாதென்று நேற்று ஷமியை பார்த்து வசைமொழியைப் பயன்படுத்துகிறார், இவரது தலைக்கனம் தெருக்கிரிகெட் அளவுக்கு அவரை கீழிறக்கியுள்ளது.
இந்நிலையில்தான் நேற்று ஹர்திக் பாண்டியாவுக்கு வீசினார் ஒரு பவுன்சரை இந்தியாவின் அதிவேக பவுலர் உம்ரன் மாலிக் அது எகிறி ஹர்திக் பாண்டியாவின் ஹெல்மெட் கம்பியைத் தாக்கியது, ஹெம்லெட் கம்பி மட்டும் இல்லையெனில் என்ன நடந்திருக்கும் என்பது பயங்கரம். உம்ரன் மாலிக்கின் டாப் 5 பந்துகள் இதுவரை
153.3 km/h, 153.1 km/h, 152.4 km/h, 152.3 km/h and 151.8 km/h என்று பதிவாகியுள்ளது. இந்த ஷோயப் அக்தர் பீற்றிக்கொள்வதையெல்லாம் உடைத்து விடுவார் போலிருக்கிறது.
மாலிக் கடந்த சில மாதங்களாக அவர் ஆட வந்த பிறகு நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்றார். இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்தியாவின் எதிர்கால அணியில் தவிர்க்க முடியாத பவுலராக மாலிக் இருப்பார் என்கிறார் ரவி சாஸ்திரி.
"அவர் சீரான முறையில் வேகம் காட்டுகிறார், அவருடைய அணுகுமுறை எனக்குப் பிடிக்கும். இந்தப் பையனால் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும். இந்த பையன் உண்மையான வேகத்தைப் பெற்றிருக்கிறான், அவர் சரியான சரியான இடத்தில் வீசினால் அவர் பல பேட்டர்களை தொந்தரவு செய்யப் போகிறார். அவரைச் சரியாகக் கையாள்வதுதான் நீங்கள் செய்ய வேண்டும். அவருக்கு சரியான செய்திகளை கொடுங்கள். நீங்கள் அவருடன் தொடர்பு கொள்ளும் விதம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். அவருடைய திறமையில் சந்தேகம் ஏதுமில்லை. இந்த பையன் ஒரு இந்திய வீரர்" என்று சாஸ்திரி கூறினார்.
டி20 உலகக்கோப்பைக்கு ஆஸ்திரேலியாவுக்கு இவருக்கும் ஒரு டிக்கெட் போட்டு விட வேண்டியதுதான் என்கின்றனர் கிரிக்கெட் பண்டிதர்கள்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.