• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • குடும்பத்தார் குரலைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுத காஷ்மீர் வீரர் உம்ரன் மாலிக்- வீடியோ

குடும்பத்தார் குரலைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுத காஷ்மீர் வீரர் உம்ரன் மாலிக்- வீடியோ

கண்ணீர் விட்டு அழுத உம்ரன் மாலிக்.

கண்ணீர் விட்டு அழுத உம்ரன் மாலிக்.

நெட் பவுலராக இரண்டு சீசன்கள் அயராது உழைத்த காஷ்மீரைச் சேர்ந்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் வேகப்பந்து வீச்சாளர் உம்ரன் மாலிக், தான் பெரிய கிரிக்கெட்டில் ஆடியதை குடும்பத்தினர் கண்டு களித்து பேசி அனுப்பிய வீடியோவைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார்.

  • Share this:
    நெட் பவுலராக இரண்டு சீசன்கள் அயராது உழைத்த காஷ்மீரைச் சேர்ந்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் வேகப்பந்து வீச்சாளர் உம்ரன் மாலிக், தான் பெரிய கிரிக்கெட்டில் ஆடியதை குடும்பத்தினர் கண்டு களித்து பேசி அனுப்பிய வீடியோவைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார்.

    ஐபிஎல் 2021 தொடரின் அதிவேக பந்தான 153 கிமீ வேகப்பந்தை ஆர்சிபிக்கு எதிராக அவர் வீசினார். லாக்கி பெர்கூசன், பும்ரா, சிராஜ், ஆவேஷ் கான் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தும் எங்கிருந்தோ வந்தான் ஃபாஸ்ட் பவுலர் நான் என்றான் என்பது போல் 150 கிமீ வேகத்துக்கு மேல் சர்வ சாதாரணமாக வீசி வருகிறார் உம்ரன் மாலிக்

    பிளே ஆஃப் பந்தயத்திலிருந்து வெளியேறிய சன் ரைசர்ஸ் இவரை முதலிலிருந்தே பயன்படுத்தியிருந்தால் ஒருவேளை மற்ற அணிகளை என்ன சேதி என்று கேட்டிருக்கலாம். சில வேளைகளில் ஐபிஎல் அணி நிர்வாகிகள் முடிவு முட்டாள்தனமாக உள்ளது என்பதை நாம் கூறித்தான் ஆகவேண்டியுள்ளது.

    ஐபிஎல் போட்டியில் ஆட வாய்ப்புப் பெற்ற உடனேயே அவரது குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த வீடியோவைப் பார்த்து மனம் உடைந்து அழுது விட்டார் உம்ரன் மாலிக் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.



    கிரிக்கெட்டில் பெரிய நிலைக்கு நீ முன்னேறியிருப்பது நம் குடும்பம் பெருமையடைவதைத் தவிர வேறு என்ன இருக்கிறது என்று மெசேஜுடன் வீடியோ பகிரப்பட்டது. இதில் உம்ரன் மாலிக்கின் குடும்பத்தினர் அனைவரும் உருக்கமாகப் பேசியதையடுத்து உடைந்து அழுது விட்டார் உம்ரன் மாலிக்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: