ஐபிஎல் 2021 தொடரிலிருந்து மேலும் இருவர் விலகல்... ரசிகர்கள் அதிர்ச்சி

ஐபிஎல் 2021

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஐபிஎல் தொடரிலிருந்து வீரர்கள் விலகிய நிலையில் தற்போது 2 நடுவர்கள் விலகி உள்ளனர்.

 • Share this:
  கொரோனா பரவலுக்கு மத்தியிலும் ஐபிஎல் 2021 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு தொற்று ஏற்படாதவாறு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்புமாறு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியது. இதையடுத்து ஆண்ட்ரூ டை, கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜாம்பா ஆகியோர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகினர்.

  டெல்லி அணியின் ஆல்ரவுண்டரான அஸ்வின் கொரோனா பேரிடர் காலத்தில் எனது குடும்பத்தினருடன் இருப்பதே சிறந்தது என்று ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். போட்டிகளிலிருந்து வீரர்கள் விலகி வந்த நிலையில் தற்போது நடுவர்களான நிதின் மேனன் மற்றும் ஆஸ்திரேலிய நடுவர் பவுல் ரிஃபுலும் விலிகி உள்ளனர். இதனை பிசிசிஐ மூத்த நிர்வாகியும் உறுதி செய்துள்ளார்.

  நிதின் மேனன் மற்றும் பவுல் ரிஃபுல் ஐசிசி எலை்ட் பேனலில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்திய நடுவர் நிதின் மேனன் தனது தாய் மற்றும் மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் எனது குடும்பத்தினருடன் இருக்க முடிவெடுத்துள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தியா - இங்கிலாந்து தொடரின் போது நடுவர் நிதின் மேனன் சிறப்பாக செயல்பட்டதால் அனைவராலும் பாராட்டப்பட்டார்.

  இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்படும் என்பதால் நாடு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் பவுல் ரிஃபுல் விலகி உள்ளார். ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ளவர் நாடு திரும்ப அனைத்து வசதியும் செய்து தரப்படும் என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது. ஆனாலும் ஆஸ்திரேலிய நடுவர் பவுல் ரிஃபுல் தொடரிலிருந்து விலகி உள்ளார். இவர்களுக்கு பதிலாக மாற்று நடுவர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  ஐபிஎல் தொடரிலிருந்து வீரர்கள் விலகிய நிலையில் தற்போது நடுவர்களும் விலகி உள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
  Published by:Vijay R
  First published: