• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • முதல் நாளே அனல் தெறிக்கும் ஆட்டம்: ஐபிஎல் போட்டி முழு விவரம்!

முதல் நாளே அனல் தெறிக்கும் ஆட்டம்: ஐபிஎல் போட்டி முழு விவரம்!

ஐபிஎல் கோப்பை

ஐபிஎல் கோப்பை

இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் 3 அரை சதம் உட்பட 380 ரன்கள் எடுத்து டெல்லி  கேப்பிட்டல்ஸ் வீரர் ஷிகர் தவான் அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

 • Share this:
  கொரோனா காரணமாக இந்தியாவில் இருந்து துபாய்க்கு மாற்றப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரின் எஞ்சியாஅட்டங்கள் செப்டம்பர் 19ம் தேதி தொடங்குகின்றன முதல் நாள் ஆட்டத்திலேயே சென்னை அணியும் மும்பை அணியும் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதவுள்ளன.

  14வது ஐபிஎல் தொடர் இந்தியாவில்  கடந்த ஏப்ரல் 9ம் தேதி தொடங்கியது. கொரோனா 2வது அலை இந்தியாவில் அதிகரித்ததால் பார்வையாளர்கள் யாரும் போட்டியை நேரில் காண அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே, தொற்று பரவல் மேலும் அதிகரித்ததோடு வீரர்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து,  ஐ.பி.எல். போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக மே மாதம் அறிவிக்கப்பட்டது.

  மோத்தம் 29  ஆட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன. மீதமுள்ள ஆட்டங்களை கொரோனா தொற்று குறைவாக உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, எஞ்சியுள்ள 31 ஆட்டங்கள் ஐக்கிய அரசு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி அக்டோபர் 15ம் தேதி வரை போட்டி நடைபெறுகிறது.

  முதலிடத்தில் டெல்லி

  தற்போதைய புள்ளி பட்டியலின்படி டெல்லி அணி 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 2வது இடத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் 3வது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் உள்ளன. இவை இரண்டுமே 10 புள்ளிகளை பெற்றுள்ளன. 8 புள்ளிகளுடன் மும்பை அணி 4வது இடத்தில் உள்ளது.

  ராஜஸ்தான் ராயல்ஸ் 6 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் பஞ்சாப் கிங்க்ஸ் 6 புள்ளிகளுடன் 6வது இடத்திலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4 புள்ளிகளுடன் 7வது இடத்திலும் 2 புள்ளிகளுடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கடைசி இடத்திலும் உள்ளன.

  இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் 3 அரை சதம் உட்பட 380 ரன்கள் எடுத்து டெல்லி  கேப்பிட்டல்ஸ் வீரர் ஷிகர் தவான் அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.  கே.எல். ராகுல் 4 அரை சதம் உட்பட 331 ரன்களுடன் 2வது இடத்திலும் டூ பிளசிஸ் 320 ரன்களுடன் மூன்றாவது  இடத்திலும் உள்ளனர்.

  அதிக விக்கெட் எடுத்தவர் பட்டியலில் பெங்களூரு வீரர் ஹர்ஷல் படேல் 17 விக்கெட்களுடன் முதல் இடத்தில் உள்ளார். டெல்லியின் அவேஷ் கான் , ராஜஸ்தான் வீரர் கிரிஸ் மோரீஸ் ஆகியோர் தலா 14 விக்கெட்கள் எடுத்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் வீரர் ராஹுல் சாஹர் 11 விக்கெட்களுடன் அடுத்த இடத்தில் உள்ளார்.

  ஐ.பி.எல். 2021 அணிகள்

  சென்னை சூப்பர் கிங்ஸ்: 2008ம் ஆண்டு ஐ.பி.எல். தொடர் தொடங்கப்பட்டத்தில் இருந்து தற்போதுவரை சென்னை அணியின் கேப்டனாக உள்ள டோனிதான் இந்த முறையும் கேப்டன். டூ பிளசிஸ், பிராவோ ஆகியோர் முக்கியமான வெளிநாட்டு வீரர்கள்.

  முழு அணி:சுரேஷ் ரெய்னா, எம்எஸ் தோனி, நாராயண் ஜெகதீசப், ருதுராஜ் கெய்க்வாட், கேஎம் ஆசிப், கர்ன் சர்மா, அம்பதி ராயுடு, தீபக் சாஹர், ஃபாஃப் டு பிளசிஸ், ஷர்துல் தாக்கூர், மிட்செல் சான்ட்னர், டுவைன் பிராவோ, லுங்கி நிகிடி, சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா, இம்ரான் தாஹிர், ராபின் உத்தப்பா, மொயீன் அலி, கே.கவுதம், சேதேஸ்வர் புஜாரா, எம்.ஹரிசங்கர் ரெட்டி, கே.பகத் வர்மா, சி ஹரி நிஷாந்த், ஆர் சாய் கிஷோர், ஜோஷ் ஹேசில்வுட்.

  டெல்லி கேப்பிட்டல்ஸ்: ஸ்ரேயாஸ் அய்யர் காயமடைந்திருந்ததால் இந்தியாவின் நடைபெற்ற போட்டிகளுக்கு ரிஷப் பந்த் தலைமை தாங்கினார். தற்போது, ஸ்ரேயாஸ் அய்யர் பூரண நலம் அடைந்துள்ளதால்  அணிக்கு தலைமை தாங்க அவராக உள்ளார். எனினும், ரிஷப் பந்த் அணிக்கு தலைமை தாங்கவுள்ளார்.  ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித், ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே ஆகிய சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

  முழு அணி:

  ஷ்ரேயாஸ் அய்யர், அஜிங்க்யா ரஹானே, அமித் மிஸ்ரா, அவேஷ் கான், அக்சர் பட்டேல், இஷாந்த் சர்மா, ககிசோ ரபாடா, பிருத்வி ஷா, ரவிச்சந்திரன் அஷ்வின், ரிஷப் பந்த், ஷிகர் தவான், லலித் யாதவ், மார்கஸ் ஸ்டோனிஸ், ஷிம்ரான் ஹெட்மியர், அன்ரிச் நார்த்ஜே, ஸ்டீவ் ஸ்மித் யாதவ் , ரிபால் படேல், லுக்மான் ஹுசைன் மேரிவாலா, எம் சித்தார்த், டாம் கர்ரன், சாம் பில்லிங்ஸ், பிரவின் துபே, விஷ்ணு வினோத்.

  கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:  கொல்கத்தா  அணிக்கு இயோன் மோர்கன் தலைமை தாங்குகிறார். தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ள முக்கிய வீரர்கள்.  பேட் கம்மின்ஸ் யு.ஏ.இ.யில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ள மாட்டார். டிம் சவுத்தி மாற்று வீரராக உள்ளார்.

  முழு அணி:

  தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரசல், கமலேஷ் நாகர்கோடி, குல்தீப் யாதவ், லோக்கி பெர்குசன், நிதிஷ் ராணா, பிரசித் கிருஷ்ணா, குர்கீரத் சிங் மான், சந்தீப் வாரியர், சிவம் மாவி, சுப்மான் கில், சுனில் நரைன், இயோன் மோர்கன், ராகுல் திரிபாதி, வருண் சக்கரவர்த்தி, பவன் நெகி டிம் சீஃபர்ட், ஷாகிப் அல் ஹசன், ஷெல்டன் ஜாக்சன், வைபவ் அரோரா, கருண் நாயர், ஹர்பஜன் சிங், பென் கட்டிங், வெங்கடேஷ் ஐயர், டிம் சவுத்தி

  மும்பை இந்தியன்ஸ்: தற்போதைய சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளனர்.  ரோகித் சர்மாவுடன் பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, டி காக், பொல்ட்  ஆகிய முக்கிய வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

  முழு அணி:

  ரோகித் சர்மா, ஆதித்யா தாரே, அன்மோல்பிரீத் சிங், அனுகுல் ராய், தவல் குல்கர்னி, ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், ஜஸ்பிரித் பும்ரா, ஜெயந்த் யாதவ், கீரன் பொல்லார்ட், க்ருனால் பாண்டியா, குயின்டன் டி காக், ராகுல் சாஹர், சூர்யகுமார் யாதவ், கிறிஸ் லின், மொஹ்சின் கான், சauரா கான் திவாரி, ட்ரெண்ட் போல்ட், ஆடம் மில்னே, நாதன் கூல்டர்-நைல், பியூஷ் சாவ்லா, ஜேம்ஸ் நீஷன், யுத்வீர் சரக், மார்கோ ஜான்சன், அர்ஜுன் டெண்டுல்கர்.

  பஞ்சாப் கிங்ஸ்: இந்தியாவில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணித்தலைவர் கே.எல். ராகுல்  ஐக்கிய அரபு அமீரகத்தில் தனது திறனை வெளிப்படுத்த காத்திருக்கிறார். இதுவரை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை பஞ்சாப் அணி வென்றதில்லை. கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன் ஆகியோர் முக்கிய வெளிநாட்டு வீரர்கள்,  முகமது சமி முக்கிய பந்து வீச்சாளராக திகழ்கிறார்.

  அணி விவரம்:கேஎல் ராகுல் (சி), கிறிஸ் கெய்ல், மயங்க் அகர்வால், நிக்கோலஸ் பூரன், மன்தீப் சிங், சர்பராஸ் கான், தீபக் ஹூடா, பிரப்சிம்ரான் சிங், முகமது ஷமி, கிறிஸ் ஜோர்டான், தர்ஷன் நல்கண்டே, ரவி பிஷ்னோய், முருகன் அஷ்வின், அர்ஷ்தீப் சிங், ஹர்பிரீத் பிரார், இஷான் போரல் , ஷாருக் கான், மொயிஸ் ஹென்ரிக்ஸ், ஜலாஜ் சக்சேனா, உத்கர்ஷ் சிங், ஃபேபியன் ஆலன், சவ்ரப் குமார், நாதன் எல்லிஸ், நாதன் எல்லிஸ், அடில் ரஷித்.

  ராஜஸ்தான் ராயல்ஸ்:2008 ஆம் ஆண்டு முதல் சீசனில் ராஜஸ்தான் கோப்பையை கைப்பற்றியிருந்தது. புதிய கேப்டன் சஞ்சு சாம்சனின் கீழ், ராஜஸ்தான் ராயல்ஸ்  2 வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல முனைப்பு காட்டி வருகிறது.  இங்கிலாந்து வீரர்களான ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் இல்லாதது  அணிக்கு மிகப் பெரிய பின்னடைவு.

  அணி விவரம்:சஞ்சு சாம்சன், ரியான் பராக், ஷ்ரேயாஸ் கோபால், ராகுல் தேவாட்டியா, மஹிபால் லோமோர், கார்த்திக் தியாகி, ஆண்ட்ரூ டை, ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அனுஜ் ராவத், டேவிட் மில்லர், மனன் வோஹ்ரா, சிவம் துபே, கிறிஸ் மோரிஸ், முஸ்தாபிசூர் ரஹீம், , கேசி கரியப்பா, லியாம் லிவிங்ஸ்டன், குல்தீப் யாதவ், ஆகாஷ் சிங், க்ளென் பிலிப்ஸ், தப்ரைஸ் ஷம்ஸி.

  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராத் கோலி அணிக்கு தலைமை தாங்குகிறார். இதுவரை பெங்களுரு அணி  ஐபிஎல் கோப்பையை வென்றது இல்லை. முதன்முறையாக கோப்பையை வென்றாக வேண்டும் என்று பெங்களூரு அணி முனைப்பு காட்டி வருகிறது.  ஏபி டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல், ஜமீசன் ஆகியோர் உள்ளதால் அணி வலுவாக காணப்படுகிறது.

   அணி விவரம்:விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், யுஸ்வேந்திர சாஹல், தேவதூத் படிக்கல், ஹர்ஷல் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, ஷாபாஸ் அகமது, பவன் தேஷ்பாண்டே, க்ளென் மேக்ஸ்வெல், சச்சின் பேபி, ரஜத் பாடிதர், முகமது அசாருதீன், கைல் ஜமீசன், டான் கிறிஸ்டியன் பிரபுதேசாய், கேஎஸ் பாரத், டிம் டேவிட், துஷ்மந்த சமீரா, வனிந்து ஹசரங்கா.

  சன்ரைசர்ஸ் ஐதராபாத்: இதுவரை ஒருமுறை கோப்பையை இந்த அணி கைப்பற்றியுள்ளது. இந்த முறை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்தியாவில் நடைபெற்ற ஆட்டங்களில் 7ல் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. கேன் வில்லியம்ஸ் அணியை வழி நடத்துகிறார். ரஷித் கான், டி நடராஜன், ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் அணியில் சில முக்கிய வீரர்கள்

  அணி விவரம்:கேன் வில்லியம்சன், டேவிட் வார்னர், மணீஷ் பாண்டே, விராட் சிங், ப்ரியம் கார்க், அப்துல் சமத், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல், டி நடராஜன், அபிஷேக் சர்மா, ஷாபாஸ் நதீம், விஜய் சங்கர், முகமது நபி, ரஷித் கான், விருத்திமான் சஹா , ஸ்ரீவத் கோஸ்வாமி, பசில் தம்பி, ஜேசன் ஹோல்டர், ஜெகதீஷா சுசித், கேதர் யாதவ், முஜீப் உர் ரஹ்மான், ஜேசன் ராய்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Murugesh M
  First published: