2022 முதல் ஐபிஎல் தொடரில் 10 அணிகள்; மே மாதம் 2 புதிய அணிகளுக்கான ஏலம் நடைபெறும் என தகவல்!

2022 முதல் ஐபிஎல் தொடரில் 10 அணிகள்; மே மாதம் 2 புதிய அணிகளுக்கான ஏலம் நடைபெறும் என தகவல்!

ஐபிஎல்

2008ம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 தொடரில் 8 அணிகள் பங்கேற்று வருகின்றன. சூதாட்டப்புகார் தொடர்பாக 2016ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகாலம் தடை விதிக்கப்பட்டது

  • Share this:
2022ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் மேலும் இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்படும் என பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. வரும் மே மாதம் புதிய அணிகளுக்கான ஏலம் நடைபெற உள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

2008ம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 தொடரில் 8 அணிகள் பங்கேற்று வருகின்றன. சூதாட்டப்புகார் தொடர்பாக 2016ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகாலம் தடை விதிக்கப்பட்ட போது 8 அணிகள் வேண்டும் என்பதால் புனே மற்றும் குஜராத் ஆகிய 2 அணிகள் அந்த 2 ஆண்டுகளுக்கு மட்டும் புதிதாக சேர்க்கப்பட்டு பின்னர் கலைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் மேலும் சுவாரஸ்யத்தை கூட்டும் வகையில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்படும் என கடந்த சில தினங்களுக்கு முன்னர் தகவலாக கசிந்தது. தற்போது புதிய அணிகள் சேர்க்கப்படுவதற்கான ஏலம் வரும் மே மாதம் நடைபெறும் என தெரியவந்துள்ளது.

பிசிசிஐ-ன் தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா உட்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஆட்சி மன்றக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளின் செயலாக்கம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த கூட்டம் தொடர்பாக பெயர் கூற விரும்பாத பிசிசிஐ நிர்வாகி பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் அடுத்த ஆண்டு (2022) முதல் ஐபிஎல் தொடர் 10 அணிகள் கொண்டதாக இருக்கும். புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்படும். இந்த புதிய அணிகளுக்கான ஏல நடைமுறை வரும் மே மாதத்தில் நிறைவடையும் என தெரிவித்தார்.

அணிகள் ஏலம் நடைபெற்ற பின்னர் அவர்கள் இயங்க தேவையான போதுமான நேரம் கிடைக்கும் என அவர் குறிப்பிட்டார்.

இன்று ஒரு நாள் அணி அறிவிப்பு:

இங்கிலாந்துடனான ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது. இதில் பிரித்வி ஷா மற்றும் தேவ்தூத் படிக்கல் ஆகியோர் இடம்பெற மாட்டார்கள் என தெரிவித்தார்.

முக்கிய வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா என யாரும் விடுப்பு கேட்காததால் அணியில் மாற்றம் இருக்காது. பிரித்வி ஷா மற்றும் தேவ்தூத் படிக்கல் ஆகியோர் நன்றாக விளையாடி வருகிறார்கள் இருப்பினும் அவர்கள் தங்களுக்கான நேரம் வருவதற்காக காத்திருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
Published by:Arun
First published: