• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • நீ நடத்து சித்தப்பு... ஆர்சிபி வீரரை வைச்சு செய்யும் நெட்டிசன்ஸ்

நீ நடத்து சித்தப்பு... ஆர்சிபி வீரரை வைச்சு செய்யும் நெட்டிசன்ஸ்

ஐபிஎல் 2021

ஐபிஎல் 2021

IPL 2021 | RCB vs KKR | அணியின் மசாஜ் தெரபிஸ்ட் நவனிதா கவுதம் என்ற பெண் பின் வரிசையில் அமர்ந்திருந்தார். அவரை பார்த்து கைல் ஜேமிசன் சிரித்துக் கொண்டிருந்தார்.

  • Share this:
    கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி மோசமாக விளையாடி வந்த போது பவுலர் கைல் ஜேமிசன், தனது அணியின் மசாஜ் தெரபிஸ்ட்டை லுக் விட்ட போட்டோ இணையத்தில் வைரலானது.

    ஐக்கிய அமீரகத்தில் ஐபிஎல் 2021 தொடரின் 2-வது பாதி நடைபெற்று வருகிறது. இதில் 31-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆர்சிபி அணி 92 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆர்சிபி 50 ரன்கள் வரை 2 விக்கெட்கள் மட்டுமே இழந்து இருந்தது. ஆனால் அடுத்த 42 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் படிகல் 22 ரன்கள் அடித்ததே அந்த அணியின் அதிபட்ச ஸ்கேராக இருந்தது.

    இந்நிலையில் ஆர்சிபி அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து வந்த நிலையில் அந்த அணியின் பவுலர் கைல் ஜேமிசன் காலில் கால் பேடு கட்டியபடி அமர்ந்து இருந்தார். ஆனால் அவர் ஆட்டத்தை பார்த்து கொண்டிருக்கவில்லை. அணியின் மசாஜ் தெரபிஸ்ட் நவனிதா கவுதம் என்ற பெண் பின் வரிசையில் அமர்ந்திருந்தார். அவரை பார்த்து கைல் ஜேமிசன் சிரித்துக் கொண்டிருந்தார். நவனிதாவும் சிரித்துக் கொண்டிருந்தார். டிவியில் இந்த காட்சி தோன்றியவுடன் அது சோஷியல் மீடியாவில் மிகவும் வைரலானது. இந்த புகைப்படத்தை வைத்து நெட்டிசன்கள் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.











    ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 6 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: