Home /News /sports /

IPL 2022: தீப்பொறி சாதனை மன்னன் உம்ரன் மாலிக்கிற்கு டஃப் கொடுக்கும் மோசின் கான்- இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு?

IPL 2022: தீப்பொறி சாதனை மன்னன் உம்ரன் மாலிக்கிற்கு டஃப் கொடுக்கும் மோசின் கான்- இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு?

உம்ரன் மாலிக் - மோசின் கான்

உம்ரன் மாலிக் - மோசின் கான்

இந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 4வது இடத்தில் உம்ரன் மாலிக் உள்ளார். ஜெஃப் தாம்சன், இம்ரான் கான், மைக்கேல் ஹோல்டிங், ஷோயப் அக்தர், பிரெட் லீ வரிசையில் இன்று அதிவேகப்பவுலர்களில் இந்தியாவிலிருந்து உம்ரன் மாலிக் முன்னிலை வகிக்கிறார். உம்ரான் மாலிக். ஒரு ஐபிஎல் தொடரில் குறைந்த வயதில் 20 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    இந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 4வது இடத்தில் உம்ரன் மாலிக் உள்ளார். ஜெஃப் தாம்சன், இம்ரான் கான், மைக்கேல் ஹோல்டிங், ஷோயப் அக்தர், பிரெட் லீ வரிசையில் இன்று அதிவேகப்பவுலர்களில் இந்தியாவிலிருந்து உம்ரன் மாலிக் முன்னிலை வகிக்கிறார். உம்ரான் மாலிக். ஒரு ஐபிஎல் தொடரில் குறைந்த வயதில் 20 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார்.

    இதற்கு முன்பு ஜஸ்பிரித் பும்ரா இந்த சாதனையை படைத்திருந்தார்.பும்ரா 2017 ஆம் ஆண்டு 23 வயதில் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார். உம்ரான் மாலிக் 22 வயதில் செய்துள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்த சாதனை உம்ரான் மாலிக் வசம் வந்துள்ளது. இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசிய உம்ரான் மாலிக் 23 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஊரெங்கும் உம்ரன் மாலிக் பற்றித்தான் பேச்சாக இருக்கிறது, இந்தியாவின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவரை வழிதவற விடாதீர்கள் உடனே உம்ரன் மாலிக்கிற்கு இந்திய மத்திய வீரர்கள் ஒப்பந்தத்தில் இடம் கொடுங்கள் என்கிறார்.

    ஷோயப் அக்தர் மற்றும் கம்ரான் அக்மல் உள்ளிட்ட முன்னாள் சர்வதேச வீரர்கள் உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சால் ஈர்க்கப்பட்டுள்ளனர். கம்ரான் அக்மல் பேசும்போது, சர்வதேச கிரிக்கெட்டில் அடுத்த பிரெட்லீ மற்றும் ஷோயப் அக்தர் உம்ரான் மாலிக் தான் என புகழாரம் சூட்டியுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வரவிருக்கும் டி20 தொடர் உம்ரன் மாலிக் நிச்சயம் இடம்பெறுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    அதே போல் இன்னொரு பவுலரும் மணிக்கு 150கிமீ வேகம் வீசுகிறார், இவர் உத்தரப்பிரதேசத்தைச் சேந்த மோசின் கான். இவர் உம்ரன் மாலிக்கிற்கு டஃப் கொடுக்கிறார். உம்ரன் மாலிக் நடப்பு ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணிக்காக 13 போட்டிகளில் 8.93 என்ற சிக்கன விகிதத்தில் 21 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

    மோசின் கான், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக 8 போட்டிகளில் நேற்று கொல்கத்தாவுக்கு எதிரனா பிரஷர் மேட்சில் சிக்கனமாக வீசி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். மோசின் கானின் சிக்கன விகிதம் ஓவருக்கு 5.93 என்று உம்ரன் மாலிக்கை ஒப்ப்பிடும் போது சாதகமாக உள்ளது, ஆகவே உம்ரன் மாலிக்கை விட இவர் தேர்ந்த வீச்சாளராக மணிக்கு 150 கிமீ வேகத்துடன் சரியான லெந்தில் வீசி, கடினமான கோணத்தில் வீசுவதால் அடிக்க சிரமமாக உள்ளது மாறாக உம்ரான் மாலிக் லெந்தில் பிழைசெய்தால் பந்து ஸ்டேடியத்துக்குக் காணாமல் போய் விடுகிறது.

    மோசின் கானுக்கு வாய்ப்பளிக்காத மும்பை இந்தியன்ஸ்:

    மோசின் கான் 2018 ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியினால் அவரது அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கு வாங்கப்பட்டார். ஆனால் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டார். இந்த சீசனில் அவர் இருந்திருந்தால் கூட மும்பை இந்தியன்ஸ் இத்தனை மலிவாக வெளியேறியிருக்காது. பொதுவாக இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்திற்கு வித்தியாசமான பரிமாணத்தை கொண்டு வருகிறார்கள், வலது கை பேட்டர்களுக்கு கடினமான கோணங்களுடன் அடிக்கடி பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள். பாரம்பரியமாக, அவர்களில் பெரும்பாலோர் தங்கள் அணிகளுக்கு மேட்ச் வின்னர்களாக இருந்துள்ளதை பார்த்திருக்கிறோம்.

    உத்தரபிரதேசத்திற்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடும் மொஹ்சின், 2017-18 விஜய் ஹசாரே கோப்பையில் அறிமுகமானார். சையத் முஷ்டாக் அலி டிராபியில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் பெற்றார். இந்த ஐபிஎல் ஏலத்திலும் பாவம் மோசின் கான் ரூ.20 லட்சத்துக்குத்தான் வாங்கப்பட்டார். ஐபிஎல் கிரிக்கெட்டில் பிரச்சனையே இதுதான் அலுங்காமல் குலுங்காமல் கோடிக்கணக்கில் வாங்கும் வீரர்களும் இருக்கிறார்கள், இவர்களில் பெரும்பாலும் ஒன்றும் செய்யாமலும் இருந்து விடுகிறார்கள், மாறாக ரூ.20 லட்சம், ஒரு கோடி போன்ற தொகைக்கு ஏலம் எடுக்கப்படுபவர்கள் கடும் வெயிலிலும் நிரூபிக்க வேண்டியுள்ளது, அதுவும் மோசின் கான், உம்ரன் மாலிக் ரக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இந்திய வெயிலும் பிட்சும் இடுகாடுக்கு ஒப்பானவைதான்.

    இதில் வெற்றியடைந்து அவர்கள் அணிக்குள் வந்து நிரூபித்து நிரந்தரமாக இந்திய அணியில் இடம்பிடிப்பது மிக அரிதான காரியம். இப்போது உம்ரன் மாலிக், மோசின் கான் இருவருமே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: IPL 2022

    அடுத்த செய்தி