இன்று ஐபிஎல் ஆட்சி மன்றக்குழு கூட்டம் - போட்டிகளுக்கான அட்டவணை தயாரிப்பு குறித்து ஆலோசனை

கோப்புப்படம்

இன்று ஐபிஎல் ஆட்சி மன்றக்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், போட்டிகளுக்கான அட்டவணை தயாரிப்பு குறித்து அதில் ஆலோசிக்கப்பட உள்ளது.

  • Share this:
    ஐபிஎல் போட்டிகளின் அட்டவணை தயாரிப்பது குறித்து ஆலோசனை நடத்த ஆட்சி மன்ற குழு இன்று கூடுகிறது. ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் 19ம் தேதி முதல் நவம்பர் 8ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டிகளை இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் அளிக்கப்பட்ட விண்ணப்பத்திற்கு மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை.    இந்நிலையில், போட்டி அட்டவணையை இறுதி செய்வதற்காக ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்த உள்ளது. பிசிசிஐ தலைவர் சவ்ரவ் கங்குலி தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் போட்டி அட்டவணை, பாதுகாப்புக்காக வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
    Published by:Rizwan
    First published: