HOME»NEWS»SPORTS»ipl throwback when hardik pandya who earns rs 11 crore per year went unsold for rs 10 lakh at ipl auction aru ghta

IPL பிளாஷ்பேக் - ஏலத்தில் கண்டுகொள்ளப்படாத ஹர்திக்பாண்டியா…. இன்றோ ரூ.11 கோடி ஊதியம்!

இன்றைய தேதியில் இந்தியாவின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக இருக்கும் ஹர்திக் பாண்டியாவை, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை என்பது சுவாரஸ்யமான கதை.

IPL பிளாஷ்பேக் - ஏலத்தில் கண்டுகொள்ளப்படாத ஹர்திக்பாண்டியா…. இன்றோ ரூ.11 கோடி ஊதியம்!
ஹர்திக் பாண்டியா
  • Share this:

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரராகவும், ஐ.பி.எல் போட்டியில் மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்கும் ஹர்திக் பாண்டியாவை சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு எந்த ஐ.பி.எல் அணியும் ஏலம் எடுக்காமல் இருந்திருப்பது இப்போது வியப்பாக உள்ளது.

அதிரடி ஆட்டம், அபாரமான பீல்டிங் மற்றும் பந்துவீச்சு என ஆல்ரவுண்டராக வலம் வரும் ஹர்திக் பாண்டியா, ஐ.பி.எல் போட்டியில் கடந்த இரு சீசன்களில் மும்பை அணி சாம்பியன் பட்டம் வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார். இன்றைய தேதியில் இந்தியாவின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக இருக்கும் அவரை, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை என்பது சுவாரஸ்யமான கதை. 2014 ஆம் ஆண்டு ஐ.பி.எல் ஏலப்பட்டியலில் இடம்பெற்றிருந்த ஹர்திக் பாண்டியாவுக்கு அடிப்படை விலையாக 10 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

அவரை எந்த அணியும் ஏலம் எடுக்காததால் விலைபோகாத வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றார். பின்னர், உள்ளூர் போட்டிகளில் ஆபாரமாக விளையாடி மும்பை அணியின் கவனத்தை ஈர்த்த ஹர்த்திக் பாண்டியா, அடுத்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டார். நிர்ணயிக்கப்பட்ட விலையான 10 லட்சம் ரூபாய்க்கு போட்டியின்றி ஏலத்தில் எடுக்கப்பட்டு மும்பை அணிக்குள் நுழைந்தார். 2015 ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் முதன்முறையாக களம் இறங்கிய அவர், 9 போட்டிகளில் விளையாடி இந்திய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.



இதனால், 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியில் இடம்பிடித்தார். அங்கும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், இந்திய அணியில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தையும் தக்க வைத்துக் கொண்டார். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரராக இருக்கும் ஹர்திக் பாண்டியா ஆண்டு ஒன்றுக்கு 11 கோடி ரூபாய் ஊதியமாக பெற்று வருகிறார். மும்பை அணி தக்க வைத்துக்கொண்ட வீரர்கள் பட்டியலில் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு அடுத்த இடத்தில் ஹர்திக் பாண்டியா இடம்பெற்றுள்ளார். மேலும், ஐ.பி.எல் போட்டி மூலம் அதிக ஊதியம் பெற்றவர்கள் லிஸ்டில் 44.3 கோடி ரூபாய் ஊதியம் பெற்று 33வது இடத்தில் உள்ளார்.

10 லட்சம் ரூபாய் ஊதியத்தில் மும்பை அணிக்குள் நுழைந்த ஹர்திக் பாண்டியா, 11 கோடி ரூபாய் ஊதியம் பெறும் அளவுக்கு வளர்ந்து, மற்ற இளம் வீரர்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். பிசிசிஐ ஊதிய பட்டியலிலும், இந்தாண்டு அவரின் கிரேடு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை மும்பை அணிக்காக 80 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்திக் பாண்டியா 1349 ரன்களையும், 42 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாடினால், சச்சின் பெற்ற 38 கோடி ரூபாய் ஊதியத்தை முறியடித்து, ஊதிய பட்டியலில் ஒருபடி முன்னேறி 32வது இடத்தை பிடிக்க உள்ளார்.
Published by:Arun
First published: