IPL 2021 | சிஎஸ்கே அணியில் மூவருக்கு கொரோனா தொற்று

IPL 2021 | சிஎஸ்கே அணியில் மூவருக்கு கொரோனா தொற்று

சிஎஸ்கே

சிஎஸ்கே அணியை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

  • Share this:
    கொரோனா தொற்று அச்சத்திற்கு மத்தியில் ஐபிஎல் 2021 தொடர் நடைபெற்று வருகிறது. இதனிடையே கொல்கத்தா வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் சர்மாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்ய்ப்பட்டுள்ளது.

    இதனால் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான இன்றையப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலைியல் சிஎஸ்கே அணியில் மூவருக்கு கொரோனா தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி மற்றும் சிஎஸ்கே வீரர்கள் பயணம் செய்யும் பேருந்தின் கிளினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிஎஸ்கே வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.



    கொரோனா மத்தியில் வீரர்களுக்கு உரிய பாதுகாப்புடன் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் அணி வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரவி வருவதால் ஐபிஎல் தொடர் முழுமையாக நடைபெறுமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.


    உடனுக்குடன் செய்திகளுக்கு இணைந்திருங்கள்...
    Published by:Vijay R
    First published: