விளையாட்டு

  • associate partner

ஹாட்ரிக் ஃபோர் அடித்த ராணா.. தேவையில்லாமல் ரிவ்யூ எடுத்த தினேஷ் கார்த்திக் - நேற்றைய ஐபிஎல் போட்டியில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள்..

நேற்றைய ஐபிஎல் போட்டியில் சுவாரஷ்யமான நிகழ்வுகள் பல நடந்துள்ளன.

ஹாட்ரிக் ஃபோர் அடித்த ராணா.. தேவையில்லாமல் ரிவ்யூ எடுத்த தினேஷ் கார்த்திக் - நேற்றைய ஐபிஎல் போட்டியில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள்..
ராணா
  • News18 Tamil
  • Last Updated: September 27, 2020, 3:32 PM IST
  • Share this:
நேற்றைய ஆட்டத்தில் மூன்று  தமிழக வீரர்கள் விளையாடினர். கொல்கத்தா அணிக்காக கேப்டன் தினேஷ் கார்த்திக் மற்றும் வருண் சக்கரவர்த்தியும், ஹைதராபாத் அணிக்காக நடரஜனும் களம் கண்டனர். நடப்பு தொடரின் முதல் போட்டியில் களமிறங்கும் வருண் ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னரை ஆட்டமிழக்கச் செய்து அசத்தினார். நான்கு ஓவர் பந்து வீசிய வருண் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.இதேபோல் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய நடராஜன், கொல்கத்தா அணியின் நிதிஷ் ராணா விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். நடப்பு தொடரில் நடராஜ் வீழ்த்தும் இரண்டாவது விக்கெட் இதுவாகும். மூன்று ஓவர்கள் பந்துவீசிய நடராஜ் 27 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

2. நேற்றைய போட்டியில் இரு அணி தரப்பிலிருந்தும் தலா ஒரு அரை சதம் பதிவு செய்யப்பட்டது. ஹைதராபாத் அணி வீரர் மணீஷ் பாண்டே 38 பந்துகளில் 2 சிக்ஸ், 3 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் விளாசி அசத்தினார். நடப்பு தொடரில் முதல் அரை சதத்தையும், ஒட்டுமொத்தமாக 16வது அரைசதத்தையும் பதிவு செய்தார் மணீஷ் பாண்டே.

கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய சுப்மன் கில்லும் நடப்பு தொடரின் முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார். 62 பந்துகள் எதிர்கொண்ட கில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 2 சிக்ஸ், 5 பவுண்டரிகள் விளாசி 70 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிபெறச்செய்தார். இதன் மூலம் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றார். ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் கில் அடிக்கும் 5வது அரைசதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


Also read: தீ விபத்து ஏற்பட்ட ஐ.சி.எஃப் தொழிற்சாலை குடோனில், பாதுகாப்பு பணியில் இருந்த ஆர்.பி.எஃப் வீரர் தற்கொலை3. கொல்கத்தா அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ராணா நேற்றைய போட்டியில் ஹாட்ரிக் போர் அடித்து அசத்தினார். கலீல் அகமது வீசிய நான்காவது ஓவரின் முதல் மூன்று பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டி ரசிகர்களுக்கு வெற்றியின் நம்பிக்கையை விதைத்தார்.

4. கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ரஷித் கான் பந்துவீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்ததாக நடுவர் அறிவிக்க ரிவ்யூ கேட்டார் தினேஷ் கார்த்திக். பின்பு, மூன்றாவது நடுவர் ஆராய்ந்து நடுவர் வழங்கிய தீர்ப்பு சரியானது என அறிவிக்க மைதானத்தை விட்டு வெளியேறினார் தினேஷ் கார்த்திக். அவுட் என தெரிந்தும் ஏன் ரிவ்யூ எடுக்க வேண்டும், ஏன் ரிவ்யூவை இழக்க வேண்டும் என தினேஷ் கார்த்திக்கை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
First published: September 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading