ஐபிஎல் 2022 தொடரை குஜராத் டைட்டன்ஸ் அணி அகமதாபாத் மைதானத்தில் பிசிசிஐ நிர்வாகிகள் கங்குலி, ஜெய் ஷா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளின் முடிவுகளில் மோசடி நடப்பதாக சுப்ரமணியன் சுவாமி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி தன் சமூக ஊடகப்பக்கமான ட்விட்டரில் பதிவிட்ட கருத்து:
டாடா ஐபிஎல் போட்டி முடிவுகளில் மோசடி நடப்பதாக உளவு ஏஜென்சிகள் பரவலாக கருதுகின்றன. எனவே இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை ஒன்று தேவைப்படலாம். இதற்காக பொதுநல மனு ஒன்று பதிவு செய்வதும் அவசியமாகலாம். ஏனெனில் அரசு விசாரணை நடத்த முன்வராது, காரணம் பிசிசிஐ-யின் உண்மையான சர்வாதிகாரியாக அமித் ஷாவின் மகன் இருக்கிறார்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி ட்வீட் செய்துள்ளார்.
There is widespread feeling in intelligence agencies that the Tata IPL Cricket outcomes were rigged. It may require a probe to clear the air for which PIL may be necessary since Govt will not do it as Amit Shah’s son is defacto dictator of BCCI
— Subramanian Swamy (@Swamy39) June 2, 2022
ஏற்கெனவே ஐபிஎல் 2013 தொடரில் ஏற்பட்ட சூதாட்ட சர்ச்சை தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சுப்ரமணியன் சுவாமியின் இந்தக் குற்றச்சாட்டு பரபரப்பாகியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Amit Shah, IPL 2022, Subramanian Swamy