முகப்பு /செய்தி /விளையாட்டு / ராகுல் திவேத்தியாவுக்கு இடமில்லையா? இது என்ன அநீதி: வாய்ப்பு கொடுக்காமலேயே கழற்றி விடுவதா?

ராகுல் திவேத்தியாவுக்கு இடமில்லையா? இது என்ன அநீதி: வாய்ப்பு கொடுக்காமலேயே கழற்றி விடுவதா?

ராகுல் திவேத்தியா

ராகுல் திவேத்தியா

ராஜஸ்தானுக்கு திவேத்தியா ஆடினார், நன்றாகவே ஆடினார். மிக நன்றாக ஆடினார் என்று கூற முடியாவிட்டாலும் மோசமாக ஆடினார் என்று கூற முடியாது. கிருஷ்ணப்பா கவுதமை தேர்வு செய்திருக்கிறார்கள். முதலில் இவர் பெயர் தேர்வுப்பட்டியலில் இல்லை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டு வாய்ப்பு கொடுக்காமலேயே அவரை அணியிலிருந்து கழற்றி விடுவது மிகப்பெரிய அநீதி என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கண்டித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக இங்கு நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணியில் ஆல்ரவுண்டராக அவர் இடம்பெற்றிருந்தார். ஆனால் ஒரு போட்டியில் கூட வாய்ப்பளிக்கவில்லை. இந்நிலையில் இலங்கைக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர் அணி ஷிகர் தவான் தலைமையில் அறிவிக்கப்பட்டது. அதில் ராகுல் திவேத்தியா இடம்பெறவில்லை. வாய்ப்பு கொடுக்காமலேயே அணியிலிருந்து கழற்றி விடப்பட்டுள்ளார்.

குல்தீப் யாதவுக்கு பதிலாக நிச்சயம் ராகுல் திவேத்தியாதான் அணியில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

Also Read: கேப்டனாக ஷிகர் தவான் சாதிப்பாரா?- இலங்கை பயணத்துக்கு அடுத்த இளம் இந்திய அணி ரெடி

இந்நிலையில் கொதித்துப் போன ஆகாஷ் சோப்ரா தன் யூடியூப் சேனலில் பேசியதாவது:

எங்கே ராகுல் திவேத்தியா, கடந்த முறை இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். ஒரு வீரருக்கு வாய்ப்பளிக்காமலேயே அணியிலிருந்து கழற்றி விடுவதைப் போல அநீதி வேறு எதுவும் இருக்க முடியாது.

ஒரு வீரரை இந்திய அணிக்கு தேர்வு செய்தால் அவர்கள் குடும்பம், நண்பர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோர் உட்பட அனைவரும் மகிழ்ச்சியடைவார்கள். அவர் தோல்வியடையவோ, வெற்றியடையவோ வாய்ப்பளிக்காமல் அணியிலிருந்து தூக்குவது எவ்வளவு பெரிய பாவ காரியம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராஜஸ்தானுக்கு திவேத்தியா ஆடினார், நன்றாகவே ஆடினார். மிக நன்றாக ஆடினார் என்று கூற முடியாவிட்டாலும் மோசமாக ஆடினார் என்று கூற முடியாது. கிருஷ்ணப்பா கவுதமை தேர்வு செய்திருக்கிறார்கள். முதலில் இவர் பெயர் தேர்வுப்பட்டியலில் இல்லை.

ஐபிஎல் தொடரிலும் அவர் ஆடவில்லை. தோனி அணியில் இருந்தார் கிருஷ்ணப்பா கவுதம், ஆனால் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை. எனவே இது மிகவும் மோசமான தேர்வுக் கொள்கையாகும்.

இவ்வாறு சாடினார் ஆகாஷ் சோப்ரா.

First published:

Tags: India Cricket, India v Srilanka