• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • ஐபிஎல் கிரிக்கெட்... சிஎஸ்கே vs டெல்லி கேப்பிட்டல்ஸ் இன்று பலப்பரீட்சை : பலம், பலவீனம் என்ன?

ஐபிஎல் கிரிக்கெட்... சிஎஸ்கே vs டெல்லி கேப்பிட்டல்ஸ் இன்று பலப்பரீட்சை : பலம், பலவீனம் என்ன?

CSK vs DC

CSK vs DC

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தவுள்ளது. தொடரை வெற்றியுடன் தொடங்க சி.எஸ்.கே அணி முனைப்பு காட்ட, இரு அணிகளின் பலம் பலவீனத்தை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு…

 • Share this:
  ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தவுள்ளது. தொடரை வெற்றியுடன் தொடங்க சி.எஸ்.கே அணி முனைப்பு காட்ட, இரு அணிகளின் பலம் பலவீனத்தை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு…

  கூல் கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு தொடரின் முதல் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்துகிறது. தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணி வீரர்களும் இன்றைய போட்டியில் தீவிர முனைப்பு காட்டவுள்ளனர்.

  ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 10 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய சி.எஸ்.கே அணி கடந்த தொடரில் அடுத்தடுத்த தோல்விகளால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறமுடியாமல் தொடரிலிருந்து வெளியேறியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடப்பு தொடரில் ஆரம்பத்திலிருந்தே சிறப்பாக செயல்பட காத்திருக்கின்றனர்.

  கடந்த முறை அணியில் இடம்பெறாத சின்ன தல ரெய்னா நடப்பு தொடரில் அசத்த காத்திருக்கிறார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற தொடரின் இறுதி மூன்று போட்டிகளில் வெற்றியை வசப்படுத்த காரணமாக இருந்த சி.எஸ்.கே அணியின் இளம் நட்சத்திரம் ருத்துராஜ் மீது இந்த தொடரில் எதிர்பார்ப்பு எகிரியுள்ளது. ஓபனிங்கில் அனுபவ வீரர் டு பிளஸியுடன் இணைந்து இருவரும் ருத்ரதாண்டவம் ஆட காத்திருக்கின்றனர்.

  புதுவரவான உத்தப்பா, அம்பதி ராயுடு, தோனி, ஆல் ரவுண்டர்கள் ஜடேஜா, மொயின் அலி, மற்றும் சாம் கரண் ஆகியோர் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் வலு சேர்க்கின்றனர்.

  பந்துவீச்சில் சர்த்துல் தாக்கூர், தீபக் சஹர் ஆகியோர் பவர் பிளேயில் எதிரணியை மிரட்ட காத்திருக்கின்றனர். கடந்த தொடரில் சோபிக்க தவறிய பிராவோ இந்த ஆண்டு கைகொடுப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

  சுழற்பந்துவீச்சு அணி என அழைக்கப்படும் சி.எஸ்.கே வில் ஸ்பின்னர்களுக்கு பஞ்சமே இல்லை, காயத்திலிருந்து மீண்டு வந்த ஜடேஜே, மொயின் அலி, இம்ரான் தாஹிர், புதுவரவு கிருஷ்ணப்பா கௌதம் என அனைவரும் அசுர பலத்தில் உள்ளனர். புஜரா, உத்தப்பாவிற்கு வாய்ப்பு வழங்குவாரா தோனி? என்ற கேள்வியோடு ஒட்டுமொத்த ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

  டெல்லி அணியை பொருத்தவரை கடந்த ஆண்டு இறுதிப்போட்டிவரை முன்னேறி முத்திரை பதித்துள்ளது. அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயஷ் தொடரிலிருந்து விலகியது சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது இருப்பினும் இளம் கேப்டன் ரிஷப் பந்த் அவருடைய இடத்தை பூர்த்திசெய்வார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஷிகர் தவன், பிரித்வி ஷா, ரஹானே, ஸ்டீவன் ஸ்மித், ஹெட்மயர் ஆகியோர் பேட்டிங்கில் சிறந்த ஃபார்மில் உள்ளனர். ஆல்ரவுண்டர் ஸ்டானிஸ் இந்த ஆண்டும் அசத்த காத்திருக்கிறார்.

  சுழற்பந்துவீச்சாளர் அக்ஷர் படேலுக்கு கொரோனோ தொற்று இருப்பதால் அவருக்கு பதிலாக சுழலில் அசத்த அஸ்வின் மற்றும் மிஸ்ரா ஆகியோர் களமிறங்கவுள்ளனர். நட்சத்திர வீரர் ரபடா இன்றைய போட்டியில் களமிறங்க வாய்ப்பு குறைவே. அவருக்கு பதில் இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், கிறிஸ் வோக்ஸ், டாம் கரண் கூட்டணி என வேகத்தில் மற்ற அணிகளை ஒப்பிடும் போது அசத்தலான வீரர்கள் கொண்டுள்ளது டெல்லி..

  Must Read : கொரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்

   

  இரு அணிகளும் இதற்கு முன் நேருக்கு நேர் 23 முறை மோதியுள்ளன. இதில் சென்னை அணி 15 போட்டிகளிலும், டெல்லி அணி 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Suresh V
  First published: