முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘டி20 போட்டிகளின் கதாநாயகன் இவர்தான்’ – ஆப்கன் வீரரை தேர்வு செய்த டி வில்லியர்ஸ்…

‘டி20 போட்டிகளின் கதாநாயகன் இவர்தான்’ – ஆப்கன் வீரரை தேர்வு செய்த டி வில்லியர்ஸ்…

ஏ.பி. டிவில்லியர்ஸ்

ஏ.பி. டிவில்லியர்ஸ்

அவரை டி20-யில், மிகச்சிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவர் என்று கூற முடியாது. அவர்தான் சிறந்த ஆட்டக்காரர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India
  • Editor default picture
    reported by :
  • Editor default picture
    published by :Musthak

டி20 போட்டிகளில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றி தேடித் தருபவர் என்று ஆப்கன் வீரரை தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஏபி டிவில்லியர்ஸ் தேர்வு செய்துள்ளார். டி20 போட்டிகளில் முக்கிய வீரர்கள் பலர் இருக்கும்போது, ஆப்கன் வீரரை டிவில்லியர்ஸ் தேர்வு செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டி20 போட்டிகள் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் ஏபி டிவில்லியர்ஸ் கூறியதாவது- டி20 ஆட்டத்தில் நான் அதிகம் ரசிக்கும் கதாநாயகன் ரஷித் கான் தான். பேட்டிங் பவுலிங் என அனைத்து துறையிலும் அற்புதமான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்துவார்.

ஓர் அணியை வெற்றி பெற வைப்பதில் ரஷித் கானுடைய பங்களிப்பு மிகவும் அதிகமாக இருக்கும். டி20 போட்டிகளில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்கள் மிகக்குறைவு. அந்த வகையில் ரஷித் கான் வியப்பை ஏற்படுத்தும் ஆட்டக்காரர். பேட்டிங் அல்லது பவுலிங் என ஒரு துறையில் மட்டும் ஜொலிப்பவரால் டி20 போட்டிகளில் மேட்ச் வின்னராக இருப்பது அரிதானது. சிங்கம் போன்ற மன உறுதியைக் கொண்டவர் ரஷித் கான். அவரை டி20-யில், மிகச்சிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவர் என்று கூற முடியாது. அவர்தான் சிறந்த ஆட்டக்காரர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ரஷித் கான்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ரஷித் கான் விளையாடினார்.. 2017-ஆம் ஆண்டு அந்த அணியில் அவர் இணைந்தார். முதல் சீசனில் அவர் 14 ஆட்டங்களில் விளையாடி 17 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 2017 முதல் 2021 ஆம் ஆண்டுவரை சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி ரஷித் கான் மொத்தம் 93 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ரஷித் கான் விளையாடி வருகிறார். கடந்த சீசனில் அவர் 19 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

First published:

Tags: AB de Villiers, Rashid Khan