‘தலை’ லாமா- தோனியின் புதிய அவதாரம் குறித்து வாசிம் ஜாஃபர் கமெண்ட்

தோனி

தோனி மொட்டையடித்து க்ளீன் ஷேவ் செய்து புத்த துறவியைப்போன்று இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

 • Share this:
  அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் களமிறங்குகிறார். தல தோனியை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

  தோனியின் பேட்டிங், அவரது லீடர்ஷிப் போன்றவற்றுக்கு எந்தளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதேஅளவுக்கு தோனியின் ஹேர்ஸ்டைலுக்கும் ரசிகர் பட்டாளம் உள்ளது.

  இந்நிலையில் தோனி மொட்டையடித்து க்ளீன் ஷேவ் செய்து புத்த துறவியைப்போன்று இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

  என்னப்பா ஆச்சு நம்ம தல தோனிக்கு அப்படின்னு ரசிகர்கள் குழம்பிபோய் உள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் விளம்பரத்துக்காக தோனி இப்படியான கெட்டைப்பை போட்டுள்ளாராம். ரசிகர்கள் கவலை கொள்ளும்படி ஒன்றும் இல்லையாம். அந்த விளம்பரத்தில் சில காட்சிகள் இப்போது வெளியாகியுள்ளது. ‘எனது மந்திரத்தின் பின்னால் உள்ள ரகசியம் விரைவில் தெரியவரும்” என தோனி பேசியுள்ளார்.

  இந்நிலையில் திபெத் பவுத்த துறவி தலாய் லாமாவை போல் தோனி இருப்பதாக முன்னாள் இந்திய வீரர், இந்திய ரஞ்சி ஸ்டார் வாசிம் ஜாஃபர் தன் ட்விட்டர் பக்கத்தில் தலாய் லாமா என்பதை சற்றே மாற்றி தோனியின் செல்லப்பெயரான தல என்பதைக் குறிப்பிட்டு ‘தலை லாமா’ அதாவது ‘Thalai Lama!' என்று நகைச்சுவையாக ட்வீட் செய்துள்ளார்.

  கடந்த ஐபிஎல் போட்டியில் சென்னையில் ஆடாததால் துபாயில் சென்று சொதப்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த முறை கோப்பையை வெல்லும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து மஞ்சள் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

  ஒவ்வொரு முறையும் சென்னைப் பிட்சை ஸ்பின்னுக்குச் சாதகமாகப் போட்டு 7 போட்டிகளில் குறைந்தது 6 போட்டிகளில் வென்று 12 புள்ளிகளை எளிதில் பெற்று பிறகு வெளியில் 2- போட்டிகளை வென்று எளிதில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று வந்தது, கடந்த ஐபிஎல் போட்டி யுஏஇ-யில் நடந்ததால் இந்த ஒப்பேற்று வித்தை செய்ய முடியவில்லை. இந்த முறை பார்ப்போம் என்று கிரிக்கெட் வட்டாரம் ஆர்வத்துடன் காத்திருக்கிறது.

  இந்நிலையில் மொட்டைத்தலையுடன் பவுத்தத் துறவி போல் தோனி காட்சியளிக்க என்ன இது? ஐபிஎல்-ம் வேண்டாம் உலக வாழ்க்கையும் வேண்டாம் என்று பவுத்தத் துறவியாகி விட்டாரோ என்று உண்மையிலேயே அவரது ரசிகர்கள் கவலை கொள்ள நேரிட்டது என்னவோ உண்மை.
  Published by:Muthukumar
  First published: