முதல் செஞ்சுரி அடிச்சப்புறம் சொல்லு...- ‘பினிஷ்’ என்ற படிக்கல்லிடம் கோலி கூறியது

கோலி

தேவ்தத் படிக்கல் நேற்று ராஜஸ்தான் ராயல்சின் சொத்தப் பந்து வீச்சில் உரித்து எடுத்து 51 பந்துகளில் சதம் கண்டார். ஆர்சிபி அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை ஈட்டி முதலிடம் பிடிக்க ராஜஸ்தான் அணி கடைசி இடத்துக்குச் சரிவு கண்டது.

 • Share this:
  தேவ்தத் படிக்கல் நேற்று ராஜஸ்தான் ராயல்சின் சொத்தப் பந்து வீச்சில் உரித்து எடுத்து 51 பந்துகளில் சதம் கண்டார். ஆர்சிபி அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை ஈட்டி முதலிடம் பிடிக்க ராஜஸ்தான் அணி கடைசி இடத்துக்குச் சரிவு கண்டது.

  விராட் கோலி 47 பந்துகளில் 72 ரன்கள் எடுத்ததோடு ஆட்டத்தை பினிஷ் செய்ய விரைவு கதியில் சிக்சர்களை அடித்து கொண்டிருந்தார், அப்போது படிக்கல் பினிஷ் செய்து விடுங்கள், நான் இந்தச் சதம் இல்லாவிட்டாலும் இன்னும் சில சதங்கள் என் மட்டையிலிருந்து வரும் கவலைப்படாதீர்கள் என்ற ரீதியில் கேப்டன் கோலியிடம் தெரிவிக்க, அதற்குக் கோலி முதலில் உன்னோட முதல் சதத்தை எடுத்துட்டு இதைச் சொல்லு என்று கூறியதாக ஆட்டம் முடிந்த பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சியில் தனக்கும் படிக்கல்லுக்கும் நிகழ்ந்த உரையாடலைக் குறிப்பிட்டார்.

  படிக்கல்லின் சதத்தை ஆஹா ஓஹோ என்று கூறத் தொடங்கி விட்டனர். ஆனால் ராஜஸ்தான் சொத்தைப் பந்து வீச்சும், மோசமான களவியூகமும் படிக்கல்லுக்கு உதவியது மும்பை பிட்சும்தான், சென்னையில் அவரால் ஒன்றும் செய்ய முடியாததைப் பார்த்தோம், மும்பையில் புகுந்து விளையாடினார்.

  இந்நிலையில் கோலி கூறியதாவது:

  படிக்கல் இன்னிங்ஸ் ஒரு அபாரமான இன்னிங்ஸ், கடந்த ஐபிஎல் தொடரிலேயே படிக்கல் சிறப்பாக ஆடினார். 40-5-க்குப் பிறகு அடித்து ஆட வேண்டும் என்று பேசினோம். படிக்கல் ஒரு மிகப்பெரிய திறமை, எதிர்காலத்துக்கான இந்திய வீரர். அவர் ஆட்டத்தை எதிர்முனையில் இருந்து ரசித்தேன். டி20 என்பதே கூட்டணி அமைத்து பேட்டிங் செய்வதே.

  நான் எப்போதும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பது முடியாத காரியம், எதிர்முனை வீரர் அடிக்கிறார் என்றால் நான் ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்வதுதான் சரி. இன்று என்னுடைய பேட்டிங் ரோல் மாறுபட்டது, கடைசியில் என் ஷாட்களுக்கான பந்துகளை தேர்வு செய்து அடித்தேன். பிட்ச் அருமையாக இருந்தது.

  நானும் படிக்கல்லும் சதம் பற்றி பேசினோம். அவர் என்னை ஆட்டத்தை முடித்து விடுங்கள், என் சதம் இன்று மட்டுமல்ல இன்னும் நிறைய என்னிடமிருந்து வரும் என்றார், ஆனால் நான் ‘முதலில் உன் முதல் சதத்தை எடுத்து விட்டு இதைச்சொல்லு’ என்றேன்.

  இந்தச் சதத்துக்கு படிக்கல் தகுதியானவரே. தவறுகள் இல்லாத இன்னிங்ஸ், துல்லியமான இன்னிங்ஸ். எங்கள் அணியில் தனித்துவமான பவுலிங்குக்கான வீரர்கள் இல்லை, ஆனால் எங்கள் பந்து வீச்சு திறம்பட இருக்கிறது. டெத் ஓவர்களில் 4 போட்டிகளிலுமே சிறப்பாக திகழ்ந்தோம். 30-35 ரன்களைக் குறைத்தோம். தேவ்தத் இன்னிங்ஸ் தனித்துவமானது, ஆனால் பவுலிங் தான் வெற்றியின் முக்கியப் பங்களிப்பு.

  ரசிகர்களே அதிக உற்சாகம் அடைய வேண்டாம், நாங்கள் தொழில் நேர்த்தியுடன் ஆடுகிறோம். உத்வேகம் விரைவில் எங்களை விட்டு சென்று விடவும் கூடும். ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு அடி என்ற விதத்தில் ஜாக்கிரதையாக எடுத்து வைக்கிறோம், அதீத உற்சாகம் தேவையில்லை.

  இவ்வாறு கூறினார் விராட் கோலி.
  Published by:Muthukumar
  First published: