தமிழ்நாடு எனது ஆன்மீக இல்லம்: மேத்யூ ஹெய்டன் நெகிழ்ச்சி

மேத்யூ ஹெய்டன்.

மோடி தலைமை இந்திய அரசை வெளிநாட்டு ஊடகங்கள் சரமாரியாக விமர்சித்து வருவதற்கு ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹெய்டன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை உச்சத்தில் சென்று தற்போது படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது, ஆனால் மரண விகிதம் 4,000த்திற்கும் மேல் இருந்து வருகிறது. இந்நிலையில் மோடி தலைமை இந்திய அரசை வெளிநாட்டு ஊடகங்கள் சரமாரியாக விமர்சித்து வருவதற்கு ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹெய்டன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  இந்திய அரசு கொரோனாவைக் கட்டுப்படுத்த தீவிரமாகப் பாடுபட்டு வருகிறது என்று கூறிய ஹெய்டன் மேலும் கூறியதாவது:

  கொரோனா இரண்டாவது அலையை எதிர்த்து இந்தியா கடுமையாகப் போராடி வருகிறது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் கட்டுப்படுத்துவது என்பது யாராக இருந்தாலும் மிகச்சவாலான காரியம். இதனை அறியாமல், உள்விவரங்களை அறியாமல் உலக மீடியா இந்தியாவை அனாவசியமாக விமர்சித்து வருகின்றன. 10 ஆண்டுகளாக இந்தியா முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன்.

  தமிழ்நாடு என்னுடைய ஆன்மீக இல்லம். என் மீது அன்பு செலுத்திய இந்திய மக்களுக்காக நான் கடமைப்பட்டிருக்கிறேன். ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ளேன், பல முறை இந்தியாவுக்கு கிரிக்கெட் பயணமாகவும் கிரிக்கெட் அல்லாத முறையிலும் பயணம் மேற்கொண்டுள்ளோம். இந்தியாவையும் மக்களையும் நான் பல ஆண்டுகளாக கூர்மையாகக் கவனித்து வருகிறேன்.

  எனவே இப்போது மக்க்ள் படும் வேதனையும் ஊடகங்களின் தவறான விமர்சனத்தையும் பார்க்கும் போது என் இதயம் ரத்தம் சிந்துகிறது.

  இந்தியாவின் பன்மைத்துவத்தை மதிக்கிறேன். அதனை வழிநடத்தும் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் மீது எனக்கு நிரம்ப மரியாதை உண்டு. நான் புள்ளிவிவரங்களை அறிந்தவன் அல்ல.

  ஆனாலும் பத்திரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் இந்தியாவில் 16 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது 5 மடங்கு ஆஸ்திரேலிய மக்கள் தொகைக்கு இணையானது. தினமும் 13 லட்சம் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

  இத்தகைய பெரும் எண்ணிக்கையை சாதாரணமாக எடைபோட்டு நகர்ந்து விடலாகாது. இது மிகவும் சவாலானது, ஆகவே இந்தியாவை தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள்.

  இவ்வாறு கூறினார் மேத்யூ ஹெய்டன்.
  Published by:Muthukumar
  First published: