• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • நிச்சயமாக என் டி20 அணியில் அஸ்வினுக்கு இடமில்லை- வம்பிழுக்கும் மஞ்சுரேக்கர்

நிச்சயமாக என் டி20 அணியில் அஸ்வினுக்கு இடமில்லை- வம்பிழுக்கும் மஞ்சுரேக்கர்

ரவிச்சந்திரன் அஸ்வின்

ரவிச்சந்திரன் அஸ்வின்

  • Share this:
    ஐபிஎல் 2021 சீசனில் ரவிச்சந்திரன் அஸ்வின் 13 போட்டிகளில் 7 விக்கெட்டுகளையே எடுத்தார். அஸ்வின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன, டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் தேர்வான பிறகும் கூட அஸ்வின் டெல்லி அணிக்காக சரியாக வீசவில்லை.

    ஆக்‌ஷனை மாற்றுகிறார் ரன் -அப் உட்பட அனைத்தும் மாற்றம், டெஸ்ட் போட்டிகளில் வீசுவது போல் அவர் வீசவில்லை, பதற்றத்தில் வீசுவது போல் வீசிக்கொண்டிருந்தார், கொல்கத்தா அணிக்கு எதிராக மணிக்கு 90கிமீ+ வேகத்தில் வீசினார், ஒருமுறை 100 கிமீ வேகமும் கடந்தார், இது ஒரு ஸ்லோ பிட்ச் இன்னும் ஸ்லோ பண்ணியிருந்தால் 2 விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்திருந்தால் நிச்சயம் கொல்கத்தா வெல்வது கடினமாகியிருக்கும்.

    இதையேதான் ஸ்ரீகாந்த் தமிழ் வர்ணனையின்போது சொன்னார், இதோடு அஸ்வின் சொற்பேச்சுக் கேட்க மாட்டார் என்றும் சொன்னார். இப்போது மஞ்சுரேக்கர் தன் பங்குக்கு விமர்சனம் வைக்கையில், “அஸ்வின் குறித்துப் பேசி அதிகமாக நேரத்தை செலவிட்டு விட்டோம். அஸ்வின் டி20 கிரிக்கெட்டில் பெரிய சக்தி அல்ல. அஸ்வின் மாற வேண்டும் என்று நாம் விரும்பினாலும் அது அவரைப்பொருத்தவரை கடினமே.

    ஏனெனில் அஸ்வின் கடந்த 5-7 ஆண்டுகளாக இப்படித்தான் இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் பற்றி பேசினோம் அது சரியே. ஏனெனில் அதில் அவர் ஒரு ஃபண்டாஸ்ட்டிக் பவுலர். இங்கிலாந்தில் அவரை ஒரு டெஸ்ட் போட்டியில் கூட ஆடவைக்காதது கேலிக்கூத்து. ஆனால் டி20 கிரிக்கெட், ஐபிஎல் பற்றி பேசும்போது அஸ்வின் தேறவில்லை என்றே கூற வேண்டியிருக்கிறது.

    கடந்த 5 ஆண்டுகளாக இதே போன்றுதான் அவர் வீசுகிறார் என்பதாகவே அவர் நமக்கு காட்டியுள்ளார், அஸ்வின் போன்ற ஒருபவுலரை நான் என் டி20 அணிக்குத் தேர்வு செய்யமாட்டேன். பந்துகள் திரும்பும் பிட்ச்களாக இருந்தால் கூட நான் அஸ்வினைக் காட்டிலும் வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன், சகல் போன்றவர்களைத்தான் தேர்வு செய்வேன். இவர்கள் விக்கெட்டுகளைப் பெற்று தருவார்கள்” என்றார் மஞ்சுரேக்கர்.

    சஞ்சய் மஞ்சுரேக்கருக்கு நாக்கில் சனி என்பார்களே அதுதான் இது. ஏற்கெனவே தன் வாயால் கெட்டதால்தான் ஐபிஎல் வர்ணனைக்குழுவில் இருந்து நீக்கப்பட்டார். ஜடேஜாவை துண்டு துணுக்கு வீரர் என்று அவர் சரியாகவே சொன்னாலும் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. கடும் விமர்சனங்கள் எழுந்தன. இப்போது கடைசியில் அஸ்வின் எனும் பூனைக்கும் மணி கட்டிவிட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: