• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டி20 உலகக்கோப்பை- ‘வருண் சக்ரவர்த்தியை சாதாரணமாக எடைபோடாதீர்கள்’

டி20 உலகக்கோப்பை- ‘வருண் சக்ரவர்த்தியை சாதாரணமாக எடைபோடாதீர்கள்’

வருண் சக்ரவர்த்தி.

வருண் சக்ரவர்த்தி.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்திக் கலக்கு கலக்கென்று கலக்கப் போகிறார் என்கிறார் சுரேஷ் ரெய்னா.

  • Share this:
    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்திக் கலக்கு கலக்கென்று கலக்கப் போகிறார் என்கிறார் சுரேஷ் ரெய்னா.

    இதில் இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, அஸ்வின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வருண் சக்கரவர்த்தி 20 -20 உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாகப் பந்து வீசுவார் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறும்போது, “டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு முக்கியப் பந்து வீச்சாளராக வருண் சக்கரவர்த்தி இருப்பார். அமீரக மைதானங்கள் சுழற்பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கும். இதனால் எதிரணி வீரர்களுக்குக் கடும் நெருக்கடியை வருண் ஏற்படுத்துவார். சர்வதேசப் போட்டிகளில் வருணுக்கு அனுபவம் குறைவாக இருந்தாலும் அவர் ஆதிக்கம் செலுத்துவார்” என்று தெரிவித்துள்ளார்.

    டி20 உலகக் கோப்பை போட்டியின் பிராதான ஆட்டங்கள் அக்டோபர் 23ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை நடக்கின்றன. இதில் 24ஆம் தேதி நடக்கும் முதல் பிரதான சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது பாகிஸ்தான் அணி.

    வருண் சக்ரவர்த்தி புதிர் ஸ்பின்னர் என்று கருதப்படுபவர், ஆஃப் ஸ்பின் ஆக்‌ஷனில் லெக் ஸ்பின், பிங்கர் ஸ்பின், நக்கிள் பால், நேர் பந்து என்று பலரகங்களில் வீசக்கூடியவர் வருண் சக்ரவர்த்தி, ஐபிஎல் தொடரில் பெரிய பெரிய பேட்ஸ்மெனையெல்லாம் தனது புரியாத புதிர் பவுலிங்கில் திடுக்கிடச் செய்து வீழ்த்தியுள்ளார், ஸ்பின் நன்றாக ஆடும் இந்திய பேட்ஸ்மென்களே அவரிடம் திணறுகின்றனர்.

    இந்நிலையில் ரெய்னா மேலும் கூறும்போது, “ஐபிஎல் போட்டிகளில் யுஏஇ மற்றும் ஓமானில் என் அனுபவம் என்னவெனில் புதிர் ஸ்பின்னர்களுக்கு பிட்ச் உதவும் என்பதே. அதனால் வருண் சக்ரவர்த்தி இந்தியாவின் சிறந்த பவுலராக இருப்பார். பிட்சின் வேகத்தை அவர் சரியாகக் கணிக்கிறார். வருண் சக்ரவர்த்தி 3 சர்வதேச டி20களில்தான் ஆடியுள்ளார். ஆனால் அவரது அனுபவமின்மை பற்றி நான் கவலைப்படவில்லை.

    அதே போல் வேகப்பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாக்கூர் அணியில் இருப்பது விராட் கோலியின் தெரிவுகளை விரிவு படுத்தியுள்ளது. எனவே நீண்ட காலமாக காத்திருக்கும் இந்த உலகக்கோப்பை நடைபெற மேலும் காத்திருக்க முடியாது” என்றார் ரெய்னா.

    ஐபிஎல் 2021-ல் வருண் சக்ரவர்த்தி 18 விக்கெட்டுகளையும் ஷர்துல் தாக்கூர் 21 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: