• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • T20 World Cup: அன்றே கூறிவிட்டார் நடராஜன் - பொய்த்துப் போன நம்பிக்கை

T20 World Cup: அன்றே கூறிவிட்டார் நடராஜன் - பொய்த்துப் போன நம்பிக்கை

தங்கராசு நடராஜன்

தங்கராசு நடராஜன்

ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடினால் உலகக்கோப்பை டி20 வாய்ப்பு தானாக வந்து விடும் என்று கூறிய நடராஜனின் நம்பிக்கை இன்று பொய்த்துப் போனது.

  • Share this:
    டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் தமிழக வீரர் டி.நடராஜன் பெயர் தேர்வு செய்யப்படவில்லை என்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு அதிருப்தியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு நெட் பவுலராகச் சென்று 3 வடிவங்களிலும் ஆடி, சிறப்பாகச் செயல்பட்டு சாதனை புரிந்தவர் நடராஜன், உலகக்கோப்பை ஆட அவருக்கு கனவுகள் இருந்திருக்கும். ஆனால் காயம் காரணமாக ஐபிஎல் 2021 முதல் பாதி தொடரிலிருந்து அவர் விலகினார். இப்போது 2வது பாதி எமிரேட்சில் நடக்கவிருக்கிறது, அதில் நடராஜனின் பவுலிங்கை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில் நடராஜன் ஜூலை மாதமே தன் நிலை பற்றி ஒரு பேட்டியில் தெளிவாகக் கூறிவிட்டார், அவருக்கு அப்போதே தெரிந்திருக்கிறது, “நான் இப்போதைக்கு டி20 உலகக்கோப்பை பற்றி சிந்திக்கவில்லை. என்னுடைய காயத்திலிருந்து குணமடைந்து மீள்வது பற்றித்தான் இப்போதைக்கு சிந்தித்து வருகிறேன். நான் ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீச்சினால் டி20 உலகக்கோப்பை வாய்ப்பு தானாக வந்து விடப்போகிறது. இதுதான் என் நம்பிக்கை. ஆனால் அதற்கு நான் காயத்திலிருந்து குணமடைவது துல்லியமாக அமைய வேண்டும் என்பதே” என்றார் நடராஜன்.

    ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடினால் உலகக்கோப்பை டி20 வாய்ப்பு தானாக வந்து விடும் என்று கூறிய நடராஜனின் நம்பிக்கை இன்று பொய்த்துப் போனது, ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடினாலும் அவர் இனி அணிக்குள் நுழைவது யாராவது காயமடைந்தால்தான், அதுவும் ரிசர்வ் வீரராக முதலில் தேர்வு ஆக வேண்டும் ஏனெனில் பிரதான் அணியில் பவுலர் யாராவது காயமடைந்தால் ரிசர்வ் வீரராக இருக்கும் ஷர்துல் தாக்கூர் அல்லது, தீபக் சாகருக்குத்தான் முதலில் வாய்ப்பு அளிக்கப்படும்.

    Also Read: சாரி நடராஜன்! பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்: சேத்தன் சர்மா விளக்கம் சரிதானா?
     ஐபிஎல் கிரிக்கெட்டில் நன்றாக ஆடினால் உலகக்கோப்பை வாய்ப்பு தானாக வரும் என்று நம்பியிருந்தார் நடராஜன், ஆனால் அந்தக் கதவு மூடப்பட்டு விட்டது. அணித்தேர்வுக் குழு தலைவர் சேத்தன் சர்மா, காயமடைந்த வீரர்கள் பட்டியலில் நடராஜன் இருக்கிறார், மேலும் அவர் சமீபமாக கிரிக்கெட் எதிலும் ஆடவில்லை, அப்படியே இடது கை பவுலர் தேவைப்பட்டாலும் நடராஜனை அணிக்குள் நுழைக்க முடியும் என்று தான் நம்பவில்லை என்று கூறியது கவனிக்கத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: