T20 World Cup | ஏன் எமிரேட்ஸில் டி20 உலகக்கோப்பை? : கொரோனா 2ம் அலை ஏற்படுத்திய பேரழிவே காரணம்- ஜெய் ஷா விளக்கம்

கங்குலி-ஜெய் ஷா.

2021 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக சவுரவ் கங்குலியும், ஜெய் ஷாவும் விளக்கம் அளித்துள்ளனர்.

  • Share this:
    16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்த மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஏற்கனவே தேர்வு செய்து வைத்துள்ளது.

    20 ஓவர் உலக கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்த முடியுமா? என்பது குறித்து சூழ்நிலையை ஆய்வு செய்து முடிவெடுக்க ஜூன் 28-ந் தேதி வரை இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு, ஐ.சி.சி. காலஅவசாகம் அளித்தது. இதற்கிடையே 20 ஓவர் உலக கோப்பை போட்டி இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீகரத்துக்கு மாற்றப்பட இருக்கிறது என்றும் அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் இந்த போட்டி அக்டோபர் 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதி வரை நடைபெற இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

    இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்படுகிறது என்பதை இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நேற்று உறுதி செய்தார். இது குறித்து அவர் அளித்த ஒரு பேட்டியில், ‘20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றிக் கொள்ளலாம் என்பதை நாங்கள் ஐ.சி.சி.க்கு அதிகாரபூர்வமாக தெரிவித்து விட்டோம். போட்டியில் பங்கேற்கும் அனைத்து தரப்பினரின் உடல் நலன் பாதுகாப்பை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. போட்டி அட்டவணை குறித்து இன்னும் சில நாட்களில் முடிவு செய்வோம். உலக போட்டியை அக்டோபர் 17-ந் தேதி தொடங்குவது குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை’ என்று தெரிவித்தார்.

    இது தொடர்பாக பிசிசிஐ-யின் ஜெய் ஷா கூறும்போது, “நிறைய யோசனை, விவாதங்களுக்குப் பிறகு வீரர்களின் பாதுகாப்பு முக்கியத்துவம் கருதி ஐசிசி உலகக்கோப்பை டி20 தொடரை ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இது சுலபமான முடிவல்ல. இது தொடர்பாக பல மாதங்கள் பரிசீலித்தோம். நாட்டின் கொரோனா நிலவரங்களை சீரான முறையில் ஆராய்ந்தோம். கொரோனா 2ம் அலை பேரழிவை ஏற்படுத்தியதையடுத்து வீரர்கள், மற்றும் பிறரின் பாதுகாப்பே முக்கியம் என்ற முடிவுக்கு வந்தோம். இந்தியாவில்தான் எப்படியாவது நடத்த வேண்டும் என்று விரும்பினோம், ஆனால் அது சாத்தியமற்றது என்பதையும் உணர்ந்தோம். ” என்றார்.

    ஐபிஎல் 2021 தொடர் எமிரேட்சில் முடிவடைந்த பிறகே உலகக்கோப்பை தொடங்கும் என்று தெரிகிறது. ஐபிஎல் 2021 மீதமுள்ள போட்டிகள் செப்19-ம் தேதி தொடங்கி அக்டோபர் 15ம் தேதி வரை நடைபெறுகிறது.
    Published by:Muthukumar
    First published: