• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • சாரி நடராஜன்! பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்: சேத்தன் சர்மா விளக்கம் சரிதானா?

சாரி நடராஜன்! பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்: சேத்தன் சர்மா விளக்கம் சரிதானா?

நடராஜன்.

நடராஜன்.

ஆஸ்திரேலியா தொடரில் பெரிய அளவுக்கு தன்னை வெளிப்படுத்தி அசாத்தியமாக ஒருநாள், டெஸ்ட், டி20 என அசத்திய தமிழக இடது கை வேகப்பந்து வீச்சாளர் ‘யார்க்கர்’ நடராஜன் அணியில் தேர்வு செய்யப்படாதது பலருக்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    காயம் மட்டும்தான் அவரது நீக்கத்துக்குக் காரணமா என்ற அளவில் விவாதங்கள் மூண்டுள்ளன, இந்நிலையில் அணித் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா, நடரான் பெயர் தேர்வுக்குழு ஆலோசனையில் விவாதிக்கப்பட்டது, ஆனால் காயமடைந்த வீரர்கள் பட்டியலில் அவர் இருப்பதால் சேர்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது இதில் ஆச்சரியங்களும் உண்டு, அதிர்ச்சிகளும் உண்டு, அதில் பிரிதிவி ஷா, செகல் இல்லாதது பெரிய அதிர்ச்சியாக அமைய நடராஜன் தேர்வு செய்யப்படாதது வேதனை தருவதாக அமைந்துள்ளது.

    ஆனால் வருண் சக்ரவர்த்தி, அஸ்வின் என்று இரண்டு தமிழக வீரர்கள் இருப்பது தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது. இந்நிலையில் சேத்தன் சர்மா கூறும்போது, “டி.நடராஜன் பெயர் பரிசீலிக்கப்பட்டது. அவரும் நீண்ட நாட்கள் கிரிக்கெட் எதிலும் ஆடவில்லை. அவர் காயமடைந்த வீரர்கள் பட்டியலில் இருக்கிறார், அதனால் தான் நம் ஸ்ட்ரைக் பவுலர்களைத் தேர்வு செய்தோம்.

    அணித்தேர்வின் போது ஒவ்வொரு தேர்வாளருக்கும் மனதில் இருக்கும் விஷயம் என்னவெனில் அணியில் வேரியேஷன் இருக்க வேண்டும் என்பதே. யுஏஇ பிட்ச்கள் மந்தமானவை, மெதுவாகவே பந்துகள் வரும். அதனால் 3 வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்டியாவை ஒரு ஆல்ரவுண்ட் ஆப்ஷனாக 4வது வேகப்பந்துக்காகச் சேர்த்தோம். இடது கை வேகப்பந்து வீச்சாளர் தேவைப்பாடு இருந்தாலும் கூட நடராஜனை அணிக்குள் பிக்ஸ் செய்ய முடிந்திருக்காது” என்றார்.

    ஆகவே காயம் இரண்டாம்பட்சம்தான், அவரை அணியில் எடுக்க முடியாத அளவுக்கு நெரிசலாக இருக்கிறது என்றுதான் பொருள். ஆனால் இடது கை வேகப்பந்து வீச்சாளருக்கு தேவை இருந்தாலும் நடராஜனை அணிக்குள் பிக்ஸ் செய்ய முடியவில்லை என்பதை எப்படிப் புரிந்து கொள்வது என்பதில் சிக்கல்கள் உள்ளன.

    இதையும் படிங்க: தோனி என்ட்ரி கோலிக்கு செக்?- எப்படி இருந்தா என்ன.. தல ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்
     நடராஜன் இப்போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடும்போது பிரமாதமாகச் செயல்பட்டால் நிச்சயம் அவரது சேவையை உலகக்கோப்பை டி20யில் நாம் இழக்கவே செய்வோம். எனவே அணித்தேர்வை இன்னமும் நெகிழ்வுத்தன்மையுடன் வைத்திருக்கலாம் என்பதே நம் அபிப்ராயம், ஏனெனில் உலகக்கோப்பையில் ஆடுவதே எந்த ஒரு கிரிக்கெட் வீரரின் கனவாகவும் லட்சியமாகவும் இருக்கும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    டி.நடராஜன் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் என்று மட்டும்தான் நாம் கூற முடியும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: