• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • T20 World Cup | வங்கதேச அணியின் பலம் என்ன? போட்டிகள் எப்போது?

T20 World Cup | வங்கதேச அணியின் பலம் என்ன? போட்டிகள் எப்போது?

வங்கதேச அணி வீரர்கள்

வங்கதேச அணி வீரர்கள்

உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்கும் வங்கதேசம் அணியின் பலத்தைத் தெரிந்துகொள்வோம்.

  • Share this:
    ஏழாவது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், கடந்த 2020-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற இருந்தது. ஆனால், கொரோனா தாக்கம் காணமாக ஓராண்டுக்கு போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இத்தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் இரு தினங்களுக்கு தொடங்கி வருகின்ற நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

    இதில், சூப்பர் டுவெல் சுற்றுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. எஞ்சிய 4 அணிகளை தேர்வு செய்வதற்கான முதல் சுற்று போட்டிகள் நடைபெற்றுவருகின்றன.

    டி20 உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேசம் அணி

    டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 அணிகளில் இடம் பெறுவதற்கு குவாலிபை சுற்றில் வங்கதேசம் அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெறவேண்டும். ஆனால், ஸ்காட்லாந்து எதிரான முதல் போட்டியிலேயே வங்கதேசம் அணி அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளது. முன்னதாக, இந்த ஆண்டு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக நடைபெற்றப் போட்டிகளில் வெற்றி பெற்று வங்கதேசம் தொடரை வென்றிருந்தது. ஆனால், ஸ்காட்லாந்து எதிராக தோற்றுள்ளது. இன்று ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் 20 ஓவருக்கு 153 ரன்கள் எடுத்துள்ளது வங்கதேசம் அணி.

    டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான வங்கதேச அணி வீரர்கள்:

    மஹ்முத்துல்லா(கேப்டன்), ஷகிப் அல் ஹசன், முஷ்தபிகுர் ரஹிம், சவுமியா சர்கர், லிடான் குமார் தாஸ், அஃபிஃப் ஹோசைன், முகம்மது நயிம், நுருல் ஹசன் சோஹன், ஷாமிம் ஹோசைன், முஷ்தபிஷர் ரஹ்மன், டாஸ்கின் அகமது, முகம்மது சயிப்ஃபிதின், ஷோரிஃபுல் இஸ்லம், மாஹேதி ஹசன், நாசும் அகம்மது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: