• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • T20 World Cup 2021| 2007-ல் தோனிக்கு எதிராக கேப்டன், 2021-ல் தோனி ஆலோசகர் அவரோ பாகிஸ்தான் அணி வீரர்- யார் அது?

T20 World Cup 2021| 2007-ல் தோனிக்கு எதிராக கேப்டன், 2021-ல் தோனி ஆலோசகர் அவரோ பாகிஸ்தான் அணி வீரர்- யார் அது?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி (கோப்பு படம்)

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி (கோப்பு படம்)

ஓமான் மற்றும் யுஏஇயில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியில் மூத்த வீரர் களமிறங்குகிறார், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் முதல் போட்டியில் ஆடுகிறது.

  • Share this:
    ஷோயப் மக்சூதிற்கு பதில் சானியா மிர்சா கணவர் ஷோயப் மாலிக் பாகிஸ்தான் அணிக்குத் திரும்பியுள்ளார். 2007-ல்  தென் ஆப்பிரிக்காவில் நடந்த டி20 உலகக்கோப்பையை வென்ற போது இந்திய அணியின் கேப்டன் தோனி. அப்போது ஷோயப் மாலிக் பாகிஸ்தான் கேப்டன். இப்போது தோனி இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் பாகிஸ்தான் அணியின் வீரராக ஷோயப் மாலிக் ஆடுகிறார் இதுதான் காலத்தின் முரண்.

    மக்சூத் கீழ் முதுகு வலியினால் அவதியுற்று வருவதால் அவருக்குப் பதில் ஷோயப் மாலிக் தேர்வு செய்யப்பட்டுள்ளார், இது தொடர்பாக பாகிஸ்தான் அணித்தேர்வுக்குழு தலைவர் முகமது வாசிம் கூறும்போது, “ஐசிசி டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெறாததால் உடைந்து போனார் ஷோயப் மக்சூத் அவர் உலகக்கோப்பைக்காகவே கடுமையாகப் பயிற்சி செய்தார். பொறிபறக்கும் பார்மில் இருக்கிறார். இவரது இடத்தில் ஷோயப் மாலிக்கைச் சேர்க்கிறோம், அவரது அனுபவம் கைகொடுக்கும் என்று கருதுகிறோம்.” என்றார் முகமது வாசிம்.

    2007 டி20 உலகக்கோப்பையில் முதல் போட்டி டை ஆக பவுல் அவுட் முறையில் இந்தியா வென்றது, பிறகு இறுதியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதில் ஷோயப் மாலிக் பாகிஸ்தான் கேப்டன், அவர் பாகிஸ்தான் அணியில் 2021 உலகக்கோப்பைக்காக ஆடுகிறார் ஆனால் தோனி மெண்ட்டார் அல்லது ஆலோசகராக இந்திய அணியுடன் இணைந்துள்ளார் இதுதான் காலத்தின் கோலம் என்பது!

    2010 டி20 உலகக்கோப்பையில் ஆடாத பிறகு ஷோயப் மாலிக் 2012, 2014, 2016 டி20 உலகக்கோப்பைகளில் ஷோயப் மாலிக் ஆடினார். 116 டி20 சர்வதேசப் போட்டிகளில் பாகிஸ்தானுக்காக 2,335 ரன்களை எடுத்த மாலிக்கின் ஸ்ட்ரைக் ரேட் 124.20, 28 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளார். சிக்கன விகிதம் அபாரமான 7.08 ஆகும்.

    டி20 உலகக்கோப்பை அணி அறிவித்த பிறகு ஏற்பட்ட அதிருப்திகளை அடுத்து 4வது மாற்றத்தைச் செய்கிறது பாகிஸ்தான். சர்பராஸ் அகமட் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மன் ஹைதர் அலி சேர்க்கப்பட்டுள்ளார். அக்டோபர் 15ம் தேதி பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பைக்காக யுஏஇ புறப்படுகிறது.

    வெஸ்ட் இண்டீஸ், மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 பயிற்சி ஆட்டங்களில் ஆடுகிறது.

    பாகிஸ்தான் அணி வருமாறு: பாபர் ஆஸம் (கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), ஆசிப் அலி, பகர் ஜமான், ஹைதர் அலி, ஹாரிஸ் ராவுப், ஹசன் அலி, இமாத் வாசிம், முகமது ஹபீஸ், முகமது நவாஸ், மொகமது ரிஸ்வான், முகமது வாசிம் ஜூனியர், சர்பராஸ் அகமெட், ஷாகின் ஷா அப்ரீடி, ஷோயப் மாலிக்.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: