• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • மனதுக்குள் சிரிப்பு? அஸ்வின் திறமை பற்றி திடீர் ஞானோதயம் பெற்ற கோலி

மனதுக்குள் சிரிப்பு? அஸ்வின் திறமை பற்றி திடீர் ஞானோதயம் பெற்ற கோலி

விராட் கோலி

விராட் கோலி

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் இந்திய அணித் தேர்வின் போது அஸ்வினை வேண்டாம் என்று கேப்டன் விராட் கோலி கூறியதாக தகவல்கள் வெளியாகின ஆனால் இப்போது கேப்டன் விராட் கோலி அஸ்வினைப் பற்றி பாசிட்டிவ் ஆக கருத்து கூறுகிறார்.

  • Share this:
அக்டோபர் 24ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் கேப்டன் விராட் கோலி அணித்தேர்வு பற்றி கருத்தை தெரிவித்துள்ளார். ஏன் அணி நிர்வாகம் மீண்டும் அஸ்வினிடம் திரும்பியது என்பதை விளக்கும் கோலி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அஸ்வின் நிறைய தைரியத்துடன் வீசுகிறார் என்கிறார்.

அஸ்வின் வெள்ளப்பந்து கிரிக்கெட்டில் ஆடி 4 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது, இப்போது திடீரென அவரை அழைப்பது அஸ்வினுக்குத்தான் நிரூபித்தாக வேண்டிய நெருக்கடியை அளித்துள்ளது, இப்போது அவரை ஆதரித்து கோலி பேசினாலும் நாளை டி20 உலகக்கோப்பையில் அஸ்வின் சரியாக வீசவில்லை எனில் மனதுக்குள் சிரித்துக் கொள்வார். கோலி உண்மையில் யஜுவேந்திர சகல் அணியில் வேண்டுமென்று கேட்டார், ஆனால் அஸ்வினை எடுத்ததோடு ராகுல் சாகரையும் தேர்வு செய்துள்ளனர்.

இந்த காம்பினேஷன் தோல்வி அடைந்தால் நிச்சயம் கோலி மனதுக்குள் சிரித்து கொள்வார். ஆனால் புள்ளி விவரங்களின்படி அஸ்வின் ஐபிஎல் சிக்கன விகிதம் பந்து வீச்சில் ஓவருக்கு 6.91 ரன்களே. ஃபிங்கர் ஸ்பின்னர்களில் பெஸ்ட் இவர்தான் சிறந்த சிக்கனவாதி.

இந்நிலையில் விராட் கோலி கூறியதாவது, “அஸ்வின் பந்து வீச்சில் ஒரு விஷயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, இப்போது வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அவர் தைரியமாக வீசுகிறார். ஐபிஎல் தொடரில் கடந்த 2 ஆண்டுகளாகப் பார்த்தால் கடினமான ஓவர்களை பவர் ஹிட்டர்களுக்கு நல்ல முறையில் வீசுகிறார். கெய்ரன் பொலார்டு, போன்ற பவர் ஹிட்டர்கள் கிரீசில் இருக்கும் போது சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்கிறார் அஸ்வின்.

ஐபிஎல் பவர் ஹிட்டர்கள் ஸ்பின்னர்களை அச்சுறுத்தும் வகையில் பேட் செய்வார்கள். ஆனால் அஸ்வின் தன் திறமையை நம்புகிறார். இப்போது அஸ்வின் பந்து வீச்சில் இருக்கும் கட்டுப்பாடு, பல தினுசான பந்துகளை வீசும் திறன் ஆகியவை எங்களுக்கு ஒரு அனுபவஸ்தரைக் கொடுத்திருப்பதாக உணர வைத்துள்ளது. அஸ்வின் ஏகப்பட்ட சர்வதேச கிரிக்கெட்டில் ஆடியவர்.

இப்போது டி20 கிரிக்கெட்டுக்கு சர்வதேச அளவில் திரும்பியுள்ளார். இவர்களெல்லாம் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர்கள். எனவே தன் வெள்ளைப்பந்து திறமைகளை அஸ்வின் வளர்த்துக் கொண்டதற்காக அவருக்கு அளித்த பரிசுதான் டி20 உலகக்கோப்பை தேர்வு. அஸ்வின், ஜடேஜா போன்ற விரல் ஸ்பின்னர்கள் பிரமாதமாக ஆடுகின்றனர்” என்கிறார் கோலி.

Also Read: T20 World Cup 2021:வங்கதேச அணியைப் பார்சல் செய்த அமேசான் பார்சல் டெலிவரி ஊழியர் கிறிஸ் கிரீவ்ஸ்

சில மாதங்களுக்கு முன்புதான் இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட ஆடவிடாமல் அடித்து இப்போது திடீரென அஸ்வின் திறமைகளைப் புகழ்கிறார் கோலி. இதற்கு முன்னால் எப்போது அஸ்வின் தைரியமில்லாமல் வீசினார்? 16 வயதினிலே படத்தில் ரஜினி கூறும் டயலாக்தான் நினைவுக்கு வருகிறது: ‘இதெப்டி இருக்கு.’ஹா ஹா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: