ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

அது எப்படி நடந்தது என்றே தெரியவில்லை... நடராஜனுக்கு கொரோனா தொற்று குறித்து பிசிசிஐ அதிகாரி விளக்கம்

அது எப்படி நடந்தது என்றே தெரியவில்லை... நடராஜனுக்கு கொரோனா தொற்று குறித்து பிசிசிஐ அதிகாரி விளக்கம்

டி.நடராஜன்

டி.நடராஜன்

சன்ரைசர்ஸ் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது குறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி விளக்கமளித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் டெல்லிக்கு அணிக்கு எதிரான போட்டியின் போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பிசிசிஐ-ன் விதிமுறைகளின் படி ஒவ்வொரு போட்டிக்கு முன்னும், பின்னும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன்படி இன்று காலை சன்ரைசர்ஸ் அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சன்ரைசர்ஸ் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளளனர். ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதும் நடராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது வீரர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

  நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது தொடர்பாக பிசிசிஐ மூத்த அதிகாரி விளக்கமளித்துள்ளார். அதில், “அது எப்படி நடந்தது என்றே தெரியவில்லை. வீரர்கள் அனைவரும் கடுமையான பயோ-புல்லிங்கில் உள்ளனர். நாங்கம் இப்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளோம். ஐபிஎல் தொடரில் இனிமேல் எந்த வழக்குகளும் வர வாய்ப்பில்லை என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் கவலையில் தான் இருக்கிறோம். ஆனால் பீதியடைய வேண்டிய அவசியமில்லை. நாங்கள் ஐக்கிய அமீரகத்தில் உள்ள அனைத்து ஆதரவும் உள்ளது. அவர்களும் நடைபெறும் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்“ என்றுள்ளார்.

  இதனிடையே டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 முடிவுகளில் 9 விக்கெட்களை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபடா அதிகபட்சமாக 3 விக்கெட்களை வீழத்தினார்.

  POINTS TABLE:

  இதை தொடர்ந்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி இலக்கை எளிதாக துரத்தியது. எளிய இலக்கு என்பதால் நிதானமாக விளையாடி டெல்லி அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. அந்த அணியின் ஸ்ரோயஸ் ஐயர் அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் டெல்லி 14 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

  ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vijay R
  First published:

  Tags: IPL 2021, T natarajan