சூர்யகுமார் யாதவ் லெவலே வேற; ஷ்ரேயஸ் அய்யர் சரிப்பட மாட்டார்- கம்பீர் அதிரடி

சூரிய குமார் யாதவ்

சூர்ய குமார் யாதவ்விடம் உள்ள ஷாட்கள் அய்யரிடம் இல்லை, சூரியகுமார் யாதவ் லெவலே வேற என்கிறார் கவுதம் கம்பீர்.

 • Cricketnext
 • Last Updated :
 • Share this:
  அதே போல் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கு அஸ்வின் தேர்வு செய்யப்பட்டது குறித்து கம்பீர் உண்மையிலேயே மகிழ்ச்சியடைந்துள்ளார். “அஸ்வினுக்காக மகிழ்ச்சியடைகிறேன். எந்த வகையிலும் அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிலிருந்து ஒதுக்கப்பட்டிருக்கக் கூடாது. இப்போது திரும்பியுள்ளார், தேர்வுக்குழுவைத்தான் பாராட்ட வேண்டும். இது உண்மையில் புதிய பரிமாணத்தை கொடுக்கிறது. அஸ்வின் புதிய பந்தில் தொடக்கத்தில் வீசுவார், நடுவில் வீசுவார், டெத் ஓவர்களிலும் வீசுவார். என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு தரமான கிரிக்கெட் வீரர்.

  அதிக ஒருநாள், டி20 போட்டிகளில் அவர் இந்திய அணியில் ஆடியிருக்க வேண்டும். அவர் அதிகமாக விளையாடவில்லை.
  சூரியகுமார் யாதவ் உண்மையில் வேற லெவல் கிளாஸ், அதாவது ஷ்ரேயஸ் அய்யரை ஒப்பிடும்போது இவர் வேற லெவல். சூரியகுமார் யாதவ் வழக்கத்துக்கு மாறான ஆட்டம் கொண்டவர். டி20 கிரிக்கெட்டுக்கு இத்தகைய ஆட்டக்காரர்தான் தேவை. பலதரப்பட்ட இடங்களிலும் அடிக்கும் வீரர்கள் தேவை.

  டி20 கிரிக்கெட் என்பதே அதுதான். பின்பக்கம் தூக்கி அடிப்பார், லேட் கட் ஆடுவார், சூரிய குமார் யாதவ் தூக்கி அடிக்கக் கூடியவர், அவரிடம் அனைத்து வகையான ஷாட்களும் உள்ளன.
  நம்பர் 4-ல் இறங்கி இப்படி ஆடுவது ஆச்சரியம்தான், ஏனெனில் 4ம் நிலை என்பது மிக முக்கியமானது. டி20 கிரிக்கெட்டில் டாப் 3 இடங்களில் ஆடுவது எளிது, ஆனால் 4ம் நிலை கடினம்.

  சூரியகுமார் யாதவ்.


  2 விக்கெட்டுகள் போன பின்பு இறங்க வேண்டியிருக்கும் விக்கெட்டையும் காக்க வேண்டி வரும், ரன் ரேட்டையும் பராமரிக்க வேண்டி வரும்.  சில வேளைகளில் 130/2 என்ற நிலையில் இறங்க வேண்டி வரும். அதே ரன் ரேட்டை பராமரிக்க வேண்டி வரும் இதில் சூரியகுமார் யாதவ் பிரமாதம்.

  ஷ்ரேயஸ் அய்யரிடம் இது இல்லை. மேலும் அய்யர் ஒரு சீரியஸ் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளார், அவர் என்ன விதமான பார்மில் இருக்கிறார் என்பது தெரியவில்லை. ஐபிஎல் 2வது சுற்றில் அவர் எப்படி ஆடுவார் என்பதும் தெரியவில்லை. எனவேதான் சூரியகுமார் யாதவ்வை தேர்வு செய்துள்ளனர், இவர் சர்வதேச கிரிக்கெட்டில் நன்றாகவே ஆடிவருகிறார்” இவ்வாறு கூறினார் கம்பீர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Muthukumar
  First published: