• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • துபாயிலிருந்து அவசர அவசரமாக ரெய்னா இந்தியா திரும்பியது ஏன்? அதிர்ச்சி பின்னணி

துபாயிலிருந்து அவசர அவசரமாக ரெய்னா இந்தியா திரும்பியது ஏன்? அதிர்ச்சி பின்னணி

சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா

அடையாளம் தெரியாத நபர் தாக்கியதில் சுரேஷ் ரெய்னாவின் மாமா உயிரிழந்ததால் அவர் இந்தியா திரும்பினார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

  • Share this:
ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகிய சி.எஸ்.கே அணியின் துணை கேப்டன் ரெய்னா அவசரமாக இந்தியா திரும்பியது ஏன் என்று தகவல் வெளியாகி உள்ளது.

நடப்பாண்டு ஐ.பி.எல் தொடர் வரும் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்க உள்ளது. ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணி வீரர்களும் துபாய்க்கு சென்று அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

சி.எஸ்.கே அணியின் கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் ஊழியர்கள் செப்டம்பர் 21-ம் தேதி சென்னையிலிருந்து தனிவிமானம் மூலம் துபாய் சென்று அங்கு தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணத்திற்காக இந்தியா திரும்பியதாக சி.எஸ்.கே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது. இதையடுத்து அவர் இந்தாண்டு ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதில் சுரேஷ் ரெய்னாவின் மாமா உயிரிழந்ததால் அவர் இந்தியா திரும்பினார் என்று தகவல் வெளியாகி உள்ளது. பதன்கோட்டில் தரியால் என்ற கிராமத்தில் சுரேஷ் ரெய்னாவின் மாமா குடும்பத்தினர் ஆகஸ்ட் 19-ம் தேதி இரவு, அவர்களது வீட்டு மொட்டை மாடியில் படுத்து தூங்கி உள்ளனர்.

அப்போது திடீரென அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவர்களை பயங்கர ஆயுதங்களால் தாக்கி உள்ளனர். இதில் சுரேஷ் ரெய்னாவின் தந்தை சகோதாரி ஆஷா தேவி மற்றும் அவரது உறவினர்கள் 2 பேர் காயமடைந்தனர். மேலும் சுரேஷ் ரெய்னாவின் மாமா அசோக் குமார் தலையில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெறுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: